தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
கர்ப்ப காலத்து வாந்தியை தவிர்க்கும் எளிய வழிமுறைகள்
மசக்கை காலத்தில் கர்ப்பிணிகள் வாந்தியெடுப்பது இயல்பே. சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் வாந்தியும் குமட்டலும் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய முறையில் வாந்தியைத் தவிர்ப்பதற்கு கை வைத்தியம் உள்ளது.
அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள், அரச மரப் பட்டையைக் காயவைத்து எரித்துச் சாம்பலாக்கி, தண்ணீரில் கலக்கி வடிகட்டிக் குடித்தால் உடனே வாந்தி நின்று போகும்.
இஞ்சிச் சாறுடன் சம அளவு வெங்காயச் சாறையும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வாந்தி நிற்கும்.
புதிய மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு மிளகாய் வற்றலைப் போட்டு நன்றாக வறுத்து எடுத்த பிறகு, அதில் 2 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடித்தால் வாந்தி உடனே நிற்கும்.
எலுமிச்சை மர இலைகளை நன்றாக அரைத்து உப்புப் போட்டுத் தண்ணீரில் கரைத்துக் குடித்தால் வாந்தி வருவது நின்றுவிடும்.