கேட்க கொஞ்சம் அருவருப்பா தான் இருக்கும்… ஆனா செஞ்சா ஆரோக்கியமா இருக்கலாம்…
நாம் தவறான பழக்கம், அருவருபு்பான பழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள், மருத்துவர்கள் திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லும் செயல்கள் இஇவையெல்லாம் உண்மையாகவே தவறானவையா?… அதனால் வெறும் தீங்கு மட்டும் தான் நேருமா? அதில் நன்மை எதுவும் இல்லையா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?… அப்படி நம்மிடம் இருக்கும் அல்லது நாம் செய்ய வேண்டிய சில அருவருப்பான செயல்கள் மூலம் நமக்கு நல்லது நடந்தால் கசக்கிறதா என்ன? நாம். அருவருப்பாக நினைக்கும் சில விஷயங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன என்பதை நம்ப முடிகிறதா இல்லையா?… ஆனால் அதுதான் உண்மை. கீழே வரும் தவறு என்று நீங்கள் நம்பும் சில விஷயங்களை செய்து தான் பாருங்களேன்.
ஆரோக்கியமும் தவறான பழக்கமும் நாம் சிறுவயதில் இருக்கும்பொழுது அம்மா எப்பொழுதும் சொ்லலுவார் சுயிங்கம் மெல்லுவது மிகத் தவறான பழக்கம் என்றும் இது குடலுக்குள் சென்று ஒட்டிக் கொள்ளும் என்று சொல்வார். நம்மை கண்டிப்பார். அதேபோல், ஏதாவது பழங்கள் சாப்பிடும் போதோ அல்லது காதுக்குள்ளோ ஏதாவது சின்ன விதை காதுக்குள் அல்லது வயிற்றுக்குள் போய்விட்டால் உடனே வயிற்றுக்குள்ளும் காதுக்குள் இருக்கும் விதை தலைக்குள்ளும் மரமாக முளைக்கும் என பயமுறுத்துவார்கள். ஏறக்குறைய சிறுவயதில் நாம் எல்லோருமே அதை நம்பியிருப்போம். விதைகளை விழுங்கும்போது பயந்திருப்போம்.
ஆனால் இவையெல்லாமே நம்மை பயமுறுத்துவதற்காக சொல்லப்பட்ட கதைகள் மட்டுமே. ஆனால் அவற்றில் பெரிய அளவில் உண்மையில்லை என்றாலும் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை தான். கீழே வரும் ஏழு டிப்ஸ்களும் கேட்கும்போதும் செய்யும்போதும் கொஞ்சம் அருவருப்பாக தான் இருக்கும். ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாதுகாப்பான வாழ்க்கையையும் உங்களுக்குக் கொடுக்கும். என்ன இனிமேல் இந்த கெட்ட பழக்கத்தை மீண்டும் தொடரலாமா?… நல்ல விஷயங்கள் அதிகமா இருந்தா மாறித்தானே ஆகணும். பல் துலக்காதீங்க…
ஹலோ… ஹலோ… அவசரப்படாதீங்க… நான் பல்லே விளக்க வேண்டாம்னு சொல்லல… அடிக்கடி பல் விளக்காதீங்கன்னு தான் சொல்றோம். குறிப்பாக, சிலருக்கு சாப்பிட்டு முடிச்ச உடனே பல் துலக்கிற பழக்கம் இருக்கும். அதை முதல்ல விடுங்க. குறிப்பாக தக்காளி, சிட்ரஸ் பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிட்ட பின், உடனே பல் துலக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள அமிலங்கள் வாய் மற்றும் பற்கள் மீது இருக்கும். நீங்கள் பிரஷ் கொண்டு அதை தேய்க்கும் போது. பற்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறைந்தது அரை மணி நேரமாவது இடைவெளி கொடுங்கள். பின்பக்க எடை உடல் மெலிந்து சிலிம்மான இருக்க வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை தான். அதற்காக தசையே இல்லாமல் எலும்பும் தோலுமாக இருக்க முடியாது. குறிப்பாக, எந்த அளவுக்கு தசைகள் இருக்கிறதோ அதற்கு ஏற்ற அளவு கொழுப்புச்சத்தும் நம்முடைய உடலில் இருக்க வேண்டும்.
அதனால் பின்பக்கம் எடை கூடினால், உடல் ஆரோக்கியமும் ஹார்மோன் சுருப்பும் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. நிறைய கலோரி உணவுகள் நிறைய கலுாரி உணவுகள் சாப்பிட்டால் எடை கூடும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உடல் எடையைக் குறைக்கத்தான் செய்யும். கார்போஹைட்ரேட் உணவுகள் உடலுக்கு பெரிதாக ஆற்றலைத் தருவதில்லை. அதற்கு பதிலாக ரத்தத்தில் சர்கு்கரை அளவைத் தான் அதிகப்படுத்துகிறது. அதனால் கார்போ – ஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்துவிட்டு,அதிக அளவில் புரதமும் கொழுப்புச் சத்தும் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, பீநட் பட்டர், சீஸ் போன்ற உயர் கொழுப்பு உணவுகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை அதிக நேரத்துக்கு பசியெடுக்காமல் பார்த்துக் கொள்ளும். உடல் எடையும் குறையும். சூடான பானங்கள் அதிகமாக சூடான பானங்க்ள குடித்தால், உடலின் வெப்பநிலையும் அதிகமாகிவிடும்.
உடல் வெப்பத்தை தணிக்க வேண்டும் என்றால் குளிர்பானங்கள் தான் குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் குடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?… குளிர் பானங்கள் தான் உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும். சூடான பானங்களைக் குடிக்கும்போது தான் உடல் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். எப்போது சூடான பானங்கள் குடிக்கிறோமோ அப்போது உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும். அதனால் இயல்பாகவே உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அடையும். உடற்பயிற்சி உடற்பயிற்சி என்றாலே நம்மில் பலபேர் முகம் சுழிக்க ஆரம்பித்துவிடுவோம். நாம் எரிச்சலடையும் விஷயங்களில் இந்த உடற்பயிற்சியும் ஒன்று தான். இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சோம்பலாக நம்முடைய உடலில் துங்கிக் கொண்டிருக்கும் செல்கள் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டமும் உடல் இயக்கமும் சீராக இருக்கும்.
உடலுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் கிடைக்கும். தசைகள் வலுவடையும். அதனால் இன்றிலிருந்து உங்கள் சுாம்பேறித்தனத்தை கொஞ்சம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். ஃப்ரீசிங் இதயக் கோளாறுகள் இருக்கிறவர்கள் எப்போதும் தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, உடலில் அடிக்கடி ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். இது உடலில் உள்ள ஹைப்போதெர்மியாவை தூண்டும் செயலைச் செய்கிறது. உடலின் வெப்பத்தைக் குறைத்தாலே மாரடைப்பு வருவது தவிர்க்கப்படும். கழிவறை கழிவறையில் நீங்கள் சென்று திரும்பும் முன், தண்ணீரை பிளஷ் செய்வோம். அவ்வாறு செய்வதற்கு முன்பாக அதனை மூடி விடுங்கள். திறந்திருக்கும்போது அப்படியே பிளஷ் செய்வதால், அந்த நீர் தரையில் படும். கிருமிகள் பரவும். பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.