டீன் ஏஜ் பருவத்தினர் உடலுறவு சார்ந்த எஸ்.எம்.எஸ்களை தங்களது துணைக்கு அனுப்புகின்றனர். இந்த உடலுறவு சார்ந்த அரட்டைகள் டீன் ஏஜ் பருவத்தில் தேவைதானா என வயதில் பெரியவர்கள் நினைப்பார்கள். ஆனால் டீன் பருவத்தினர் இந்த உடலுறவு சம்பந்தப்பட்ட உரையாடல்களை சரி என்றே நினைக்கின்றார்கள்.
ஏன் என்றால், பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் உடலுறவு பற்றியும் எதிர் பாலினத்தவர் மீதும் ஈர்ப்பும், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். இந்த ஆர்வக்கோளாறுகள் இது போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு காரணமாக அமைகின்றது.
தனது காதலன் / காதலி உடன் உடலுறவு பற்றி பேசி அவர்களது உறவை பலபடுத்திக்கொண்டால் தனது துணை தன்னை விட்டு யாரிடமும் போகமாட்டார் என்பதனை மனதில் கொண்டு டீன் ஏஜ் பருவத்தினர் இதில் ஈடுபடுகின்றனர்.
அதிகமான காதலால் கூட இதுபோன்ற உடலுறவு சம்மந்தப்பட்ட சேட்டிங்குகள் அதிகமாகின்றன. இது அனைவருக்கும் இயற்கையாக தோன்றும் ஒரு உணர்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது அல்ல. எனவே அவர்கள் உடலுறவு சம்பந்தமாக பேசி தங்களது மனதை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்கின்றனர்.
பொதுவாக டீன் ஏஜ் வயதில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் இந்த உடலுறவு சம்பந்தப்பட்ட சேட்டிங்குகளுக்கு காரணமாக உள்ளது. இது சரியா? தவறா? என்பதை யோசிக்கக்கூட அவர்களுக்கு தோன்றுவதில்லை.