உறவுகள்புதியவை

பாலியல் உணர்வை தூண்டி, உடலுறவில் சிறப்பாக செயல்பட இதையெல்லாம் சாப்பிடுங்க

வாழ்க்கையில் பல பகுதிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இளமை பருவத்தில் பாலியல் உணர்வு மற்றும் உடலுறவில் ஈடுபாடு குறைவாக இருந்தால், வாழ்க்கையில் உள்ள ஈடுபாடும் குறையும், வருங்கால சந்ததிகளும் உருவாகாது. (Good Sex Feel Improve Tips Tamil)

பாலியல் உணர்வை சில உணவு பொருட்கள் இயற்கையாகவே தூண்டுகின்றன. இவை பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை தான். இவற்றை நீங்கள் அலைந்து திரிந்து வாங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்கள் பாலியல் உணர்வை அதிகப்படுத்த எந்தெந்த உணவு பொருட்கள் உதவியாக இருக்கும் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சாக்லேட் :
கோகோவில் பெனிலிதிலமைன் உள்ளது. இது உடலுக்குள் வேதியல் மாற்றங்களை உண்டாக்கி உடலுறவில் உள்ள ஈடுபாட்டை அதிகரிக்கிறது.



மிளகாய் :
மிளகாயில் உள்ள கேப்சய்சின் சுழற்சியை அதிகரித்து நாடி நரம்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

மத்தி :
மத்தியில் அதிகளவு ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோரோன்களை அதிகரிக்க செய்து உடலுறவு உணர்ச்சியை தூண்டுகிறது.

காபி :
காபியில் உள்ள காஃபின் உங்களது இருதய ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

அவகாடோ:
இதில் உள்ள வைட்டமின் ஈ ஆனது உடலில் உள்ள டெஸ்டிரோன், ஆஸ்ரோஜென், ப்ரோகேஷ்ட்ரோன் ஆகியவற்றை தூண்டி உடலுறவுக்கான தூண்டுதல்களை அதிகரிக்கிறது.

வாழைப்பழம்:
வாழைப்பழம் உடலுக்கு பொட்டாசியத்தை கொடுக்கிறது. இது உறுப்புகளின் தூண்டுதல்களுக்கு பயன்படுகிறது.

தேன்:
தேன் உடலுறவுக்கான ஹார்மோன்களை தூண்டுகிறது. இது உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட ஆண் மற்றும் பெண் உறுப்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது.

தர்பூசணி:
இந்த நீர் நிறைந்த பழம் இரத்த குழய்களை சீரமைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலுறவு ஈடுபாடு அதிகரிக்கிறது.

அண்டிசோக்கஸ் (artichokes):
இது அடுக்கு அடுக்காக இருக்கும் ஒரு பூ வகையாகும். இதன் அடுக்குகளை சாப்பிடுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது.

பைன் நட்ஸ்:
இதில் அதிகளவில் ஜிங்க் உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான உடலுறவுக்கு உதவியாக உள்ளது.

ஆலிவ் ஆயில்:
இதில் உள்ள மோனோ அன்சட்டுரேடட் மற்றும் பாலி அன்சட்டுரேடட் கொழுப்புகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது.

தேநீர் :
இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker