எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனிக்க வேண்டியவை
லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.
லிஃப்டைவிட எஸ்கலேட்டரில் ரிஸ்க் அதிகம். படிக்கட்டுகள் சரியாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 அல்லது 20 பேர் அதில் சென்றாலும் தாங்கும் திறன் இருக்க வேண்டும். படிக்கட்டுகளில் இருக்கும் பற்களில் ஏதாவது ஒன்று லேசாக உடைந்திருந்திருந்தாலும், சின்னப் பிள்ளைகளின் கால் விரல்கள் சிக்கிக்கொள்ளும்.
* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.
* லிஃப்ட் கதவுகள் மூடும்போது அதன் நடுவே பிள்ளைகள் கையைவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எஸ்கலேட்டர் என்றால், அதைவிட்டு இறங்கப்போகும் நேரத்தில், படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்திருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப் பிடித்திருக்கும்போது, எஸ்கலேட்டரிலிருந்து இறங்க முயற்சி செய்தால், நகரும் படிக்கட்டுகளின் மீதே விழுந்துவிடலாம்.
* லிஃப்டோ, எஸ்கலேட்டரோ, அதில் பிள்ளைகளுடன் ஏறும்போது முழு கவனம் அவர்களிடம் இருக்கட்டும். போனில் பேசிக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசியவாறே செல்வதைத் தவிர்க்கவும்.
* குழந்தைகளைத் தனியாக லிஃப்டிலும் எஸ்கலேட்டரிலும் ஏறவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.
* லிஃப்டில் திடீரென மின்சாரம் நின்றுவிட்டால், பதற்றமடையாதீர்கள்; கதவுகளைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.
* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருங்கள். அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சினிமா தியேட்டர் இருக்கும் ஷாப்பிங் மால்களில் படம் முடிந்ததும் ஒரே நேரத்தில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவார்கள். அந்த நேரத்தில் பொறுமை மிக அவசியம். எடை அதிகம் என்பதையும் தாண்டி, கூட்டத்தில் பிள்ளைகள் மீதான கவனம் குறைந்துவிடும்.