உறவுகள்புதியவை

வயாகரா பற்றி சில தகவல்கள்

வயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்களுக்காகவும் (viagra tablet news) வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாகரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.

வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.

இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அமுக்கம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.

வயாகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக்கூட அனுபவிக்கலாம்.
1.தலையிடி
2.வயிற்று நோ
3.வாந்தி
4.வாந்தி வரும் உணர்வு
5.வயிற்றோட்டம்
6.பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker