சுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்
சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.
சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.
என்ன தான் சுய இன்பம் காண்பதால் உடலுக்கு நன்மை விளைந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அளவாக சுய இன்பத்தை அனுபவித்து, நன்மைகளைப் பெறுங்கள். இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.
சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தான் வருமே தவிர, சுய இன்பம் கண்டால் அல்ல.
சுய இன்பம் என்பது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய ஓர் பாலியல் செயல். சர்வே ஒன்றில், 70-94 சதவீத இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் காண்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க, சிலருக்கு இந்த உணர்வு குறையும். ஆனால் பலரும் இன்னும் வயதான காலத்திலும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுய இன்பம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அளவாக மேற்கொண்டால் மட்டுமே. அதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகும்.
ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள் என்று பலர் நினைக்கின்றனர். மேலும் சர்வே ஒன்றிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பம் காண்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் இதுக்குறித்து என்ன தான் சர்வே நடத்தினாலும், பெண்கள் தாம் சுய இன்பம் காண்பதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஏனெனில் நமது சமூகத்தில் சுய இன்பம் குறித்து தவறான கண்ணோட்டம் உள்ளதால், பெண்கள் அதை மறைக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் அதிகமாக சுய இன்பம் காணமாட்டார்கள்.
தினமும் சுய இன்பம் காண்பது கெட்டதா? சொல்லப்போனால் அதிகமாக சுய இன்பம் காண்பதற்கும், சுய இன்பத்தை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் புரிந்து கொண்டால், உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். உதாரணமாக, சிலர் தினமும் எவ்வித உணர்வும் இல்லாமல் சுய இன்பம் கண்டால், அதனால் தீங்கை சந்திக்க நேரிடும். அதுவே உணர்ச்சி அதிகமாக இருந்து சுய இன்பத்தைக் கண்டால், அதனால் எவ்வித தீமையையும் சந்திக்க வாய்ப்பில்லை.
இதுவும் மக்களிடையே உள்ள சுய இன்பம் பற்றிய ஓர் தவறான கருத்து. திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள். ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம் காண்பது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.