தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.

கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.
பூண்டு

உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், ‘ஒமேகா 3’ என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker