வெயில் காலத்தில் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதலுக்கு இயற்கை வைத்தியம்
பெண்களை அசெளகரியப்படுத்துகிற முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த வெளளைப்படுதலுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
வெயில் காலத்தில் பெண்களை அசெளகரியப்படுத்துகிற முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த வெளளைப்படுதலுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
* வெந்தயத்தை ஊற வைத்து, அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு, வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிட வேண்டும். சிலர் வெந்தயக் கசப்புக்கு பயந்துகொண்டு , அதை அரைகுறையாக மென்று விழுங்கி விடுவார்கள். இப்படிச் செய்தால் பலன் கிடைக்காது.
* தண்டுக்கீரையின் தண்டுகளை மட்டும் சூப் வைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் படிப்படியாக குணமாவதோடு, இனப்பெருக்க உறுப்புகளும் பலமடையும்.
* இந்தப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு வெள்ளைப்பூசணிச் சாறுதான். வெயில் காலங்களில் மதிய வேளையில் தினமும் ஒரு கப் வெள்ளைப்பூசணிச்சாறை குடித்து வாருங்கள்.</p>
* சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை நீரில் நன்கு அலசி மோருடன் அரைத்துக் குடித்தால், உடம்பின் சூடு தணிந்து, வெள்ளைப்படுதல் ஒரே நாளில் கட்டுக்குள் வரும். கூடவே, சோற்றுக்கற்றாழை ஜெல்லை நீருடன் சேர்த்து அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டுவந்தால் உடற்சூடு கட்டுக்குள் வரும்.
* வேப்ப மரப்பட்டை மற்றும் சீரகத்தை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வெள்ளைப்படுதல் பிரச்சனை வரும்போதெல்லாம், இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து குளிர்ந்த நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டு கால் மணி நேரம் கழித்து தண்ணீரால் அலசி விடுங்கள். அந்த இடத்தில் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.
* மாங்கொட்டை மற்றும் மாம்பட்டை இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போடவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரால் அலசி வந்தால் அங்கிருக்கும் கிருமிகள் அழிந்து வெள்ளைப்படுதல் குணமாகும்.