நீர் சக்தி குறைபாடு – தவிர்க்கும் வழிகள்
வெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம்.
வெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் முதல் பாதிப்பு உடலில் நீர் சத்து குறைவது தான். இதனை கொஞ்சம் கூட அலட்சியமாக விட்டு விடக்கூடாது. உடலில் 2/3 பங்கு நீர் சத்துதான். இதனால் தான் கண் அசைவுகள். மூட்டு அசைவுகள், ஜீரணம், நச்சுக்கள் வெளியேறுதல், சரும பாதுகாப்பு இப்படி நீர் சக்தியின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சர்க்கரை நோயாளிகள், தீக்காயம் பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கு நீர்சக்தி குறைய அதிக வாய்ப்பு உண்டு. இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் கீழ்கண்ட அறிகுறிகளை அறிந்து கொண்டால் நீர் சக்தி குறைபாட்டிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
* இருதய படபடப்பு: உடலில் நீர் சத்து குறையும் பொழுது தாது உப்புகள், சர்க்கரை அளவு இவற்றில் பாதிப்பு ஏற்படும். இதனால் இருதய படபடப்பு ஏற்படும் . அதிக வியர்வையினால் மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டு இதனாலும் இருதய படபடப்பு ஏற்படலாம்.
* வாய் துர்நாற்றம்: நம் வாயிலுள்ள எச்சில் தான் நம் பற்களை சொத்தை, பல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது. பற்களை சுற்றி இவை ஒரு பாதுகாப்பினை ஏற்படுத்துகின்றது. உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக அல்லது தேவையான எச்சில் நம் வாயில் இருக்காது. வாய் வறண்டு விடும் இதனால் அதிக பாக்டீரியாக்கள் வாயில் உருவாகி துர்நாற்றத்தினை ஏற்படுத்தும். வறண்ட வாய் பல் சொத்தை, பல் பாதிப்பு இவற்றினை ஏற்படுத்தும்.
* உணவினை சிறிது மாற்றுங்கள்: தர்பூசணி, வெள்ளரி என நீர்சத்து மிகுந்த பழங்கள் காற்கறிகளை உண்ணுங்கள். இவை உடலில் நீர் சத்து குறைவதினை வெகுவாய் தவிர்க்கும்.
* மூட்டுகளில், தசைகளில் வலி: மூட்டுகளில் உள்ள தசை நார்கள் 65&80 சதவீதம் நீர் நிறைந்தவை. உடலில் நீர் குறையும் பொழுது இங்கு உராய்வு ஏற்பட்டு வலியும் வீக்கமும் ஏற்படும்.
மக்னீசிய குறைபாடு தசைகளில் வலியினை ஏற்படுத்தும் கீரை, பச்சை காய்கறிகள் உண்பது இக்குறைபாடுகளைத் தவிர்க்கும்.
* தலைவலி: மூளை ஒருதிரவ மைக்குள்தான் இருக்கின்றது. இந்த திரவம் குறைய ஆரம்பித்தால் மூளை மண்டை எலும்பில் இடிக்கலாம். இது தலைவலி ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றது. மேலும் நீர் சத்து குறையும் பொழுது மூளைக்கு ரத்த ஓட்டமும் குறைகின்றது. இதனால் குறைந்த ஆக்ஸிஜன், குறைந்த சர்க்கரை அளவு ஏற்படுகின்றது. எனவே தலைவலி ஏற்படும் பொழுது ஓரிரு தம்ளர் நீர் பருகுங்கள். தலைவலி அநேகமாகச் சரியாகலாம்.
* நீர்தான் நாம் உண்ணும் உணவினை சிறு சிறு துண்டுகளாக்கி செரித்து உடல் சத்துக்களை உறிஞ்சு கொள்ள உதவுகின்றது. நீரில் கரையும் வைட்டமின் சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றது. கழிவுப் பொருள் வெளியேற உதவுகின்றது.
* சோர்வு, சக்தியின்மை: நீர் சக்தி குறைவு போன்றவை ரத்த அழுத்தத்தினை உயர்த்தும். இருதயம் கூடுதல் வேலை செய்ய வேண்டி ஆகிவிடும். இது உங்களை சோர்வாக ஆக்கக் கூடும்.
* அடர்ந்த நிற சிறுநீர்: சிறுநீரகம் திரவ நிலையில் உடலில் சரியான நிலையில் வைக்கவே செயல்படுகின்றது. தேவையான அளவு நீர் குடிக்கும் பொழுது சிறுநீரகம் சீராக செயல்படுவதால் வெளியேறும் சிறுநீர் நிறமற்றோ அல்லது மிக லேசான மஞ்சள் நிறத்திலோ இருக்கும். ஆனால் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளாத பொழுது ரத்த அழுத்தத்தினை சீராக வைப்பதற்காக சிறுநீரகம் நீரினை உடலுக்குத் திருப்பும். இதனால் வெளியேறும் சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தேவையான அளவு நீர் சத்து இல்லாத பொழுது சிறுநீரக கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
* வறண்ட சரும உதடு: சருமம் 30 சதவீதம் நீரினைக் கொண்டது. சருமம் உருவாக்கும் எண்ணை நீர் வற்றுவதனைத் தவிர்க்கும். அடிக்கடி குளிப்பது, வறண்ட காற்று, உஷ்ணம், சரும கிருமி பாதிப்பு இவை சரும நீரினை வற்றச் செய்யலாம். இது சருமத்தினை வறட்சியானதாகவும், அரிப்பு டையதாகவும் ஆக்கும்.
* குழப்பம்: குறைந்த நீர் குடிப்பது மனக்குழப்பம், கோபம் இவற்றினை உருவாக்கும்.
ஆக 21/2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். அளவாக 2 பாட்டில்களில் தண்ணீர் வைத்துக் கொண்டு அவ்வப்போது சிறிது சிறிதாக குடியுங்கள்.