உணவுப்பழக்கத்தில் மாற்று சிந்தனை
நீரழிவு நோய், கண்கள் சோர்வு, ஜீரணக்கோளாறு, ரத்தக்கொதிப்பு என்று எல்லா வகையான நோய்களுக்கும் உணவுப் பட்டியல் உண்டு.
இவர்கள் பண்ணையில், ரசாயன உரங்கள் சேர்க்காத காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்து அவற்றை பறித்த அன்றே விற்பனை செய்கின்றனர். உடல்நலத்திற்காக காய்கறி, பழச்சாறு வகைகளை உடனே தயாரித்தும் தருகின்றனர். இந்த ஆரோக்கிய உணவு அங்காடியில் நமக்குத் தேவையான சரியான உணவைத் தேர்வு செய்ய பட்டியல் தரப்படுகிறது. நீரழிவு நோய், கண்கள் சோர்வு, ஜீரணக்கோளாறு, ரத்தக்கொதிப்பு என்று எல்லா வகையான நோய்களுக்கும் உணவுப் பட்டியல் உண்டு. அந்த உணவுகளால் என்ன பயன்? என்னென்ன மூலப்பொருட்கள் உணவில் சேர்க்கப்பட்டு உள்ளன என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
தயாரிக்கப்பட்ட உணவாக இல்லாமல், தனியாக பழங்கள், காய்கறிகளை உடனே வாங்க வசதி உண்டு. கைக்குத்தல் அரிசியில் தயாரிக்கப்பட்ட சோற்று உருண்டை பாக்கெட்டுகளும் உள்ளன. இதில் வைட்டமின், நார்ச்சத்து, உலோக உப்புகள் ஆகியவை தேவையான அளவு கிடைக்கின்றன. இந்த உருண்டைகளுக்கு ‘நிக்ர’ என்று பெயர். குறைந்த கலோரி கொண்ட நான்கு வகையான காய்கறி சூப்பும் கிடைக்கிறது.
நம் உடல்நலம் பற்றி சொன்னால், அதற்கு ஏற்ற உணவுப் பட்டியலையும், ஆலோசனைகளையும் தர சத்துணவு நிபுணர்களும், இந்த ஆரோக்கிய உணவு அங்காடியில் உள்ளனர். தங்கள் உடல்நலத்திற்கென்றே இந்த ஆரோக்கிய உணவுகளை வாங்கிச் செல்ல நீண்ட தொலைவில் இருந்தும் பலர் தினமும் வருகின்றனர். இதுபோன்று ஆரோக்கியத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரோக்கிய உணவு அங்காடிகள் ஆங்காங்கே வேகமாக திறக்கப்பட்டு வருகின்றன.
நாமோ புற்றுநோயை உண்டாக்கும் துரித உணவகங்களில் தயாராகும் உணவுகளை சாப்பிடுவதில் தான் ஆர்வமாக உள்ளோம். எப்போதுதான் மாறுவோமோ?
-மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி