யோகாவின் இன்றைய அவசியங்கள்
இன்றைய வாழ்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது. இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம். இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும், மனநலமும் மேம்படுவது உறுதி. நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம். இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.