குழந்தைகளுக்கு விருப்பமான பொடி இட்லி
இட்லி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பொடி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பொடி இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி – 10 (சதுரங்களாக நறுக்கவும்),
எண்ணெய் – தேவையான அளவு
பொடி செய்ய:
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறுப்பு எள் – தலா ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 15, உப்பு,
பெருங்காயத்தூள் – தேவையான அளவு.
செய்முறை :
வெறும் வாணலியில் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்சியில் பவுடராக பொடிக்கவும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
வாழை இலையில் கட்டி செல்லலாம். இரண்டு நாட்கள் வரை கெடாது.
குறிப்பு: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த இட்லி இது.