அழகு..அழகு..புதியவை

பெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள்

பெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பெரியவளாகி, திருணம் முடிந்த பின் வாழ்க்கை முழுவதும் தன் கரங்களில் வட்டமான வளையல்கள் அணிந்து மகிழ்கின்றனர்.

பெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பெரியவளாகி, திருணம் முடிந்த பின் வாழ்க்கை முழுவதும் தன் கரங்களில் வட்டமான வளையல்கள் அணிந்து மகிழ்கின்றனர். வாழ்க்கை ஓர் வட்டம் என்பதை நினைவு கூறும் வகையில் தங்கள் கரங்களில் விதவிதமான தங்க வளையல்களை அணிந்து மகிழ்வர். வளையல்கள் என்பது பெண்களின் கரங்களில் மங்கள பொருளாக அணிவதால், மஞ்சள், மங்கள தங்க வளையல்கள் தான் பிரதான இடம் பிடிக்கின்றன.

மங்கையர் விருப்பத்திற்கு ஏற்ற அழகிய வடிவமைப்பில் ஏராளமான புதிய மாடல் வளையல்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. அதாவது பிளைன் வளையல்கள், டிசைனர் வளையல்கள், பேன்சி வளையல்கள், மெல்லிய அலுவலக பெண்கள் அணிய கூடிய வளையல்கள் என்றவாறு பல விதமாய் அணிவகுக்கின்றன.

வளையல்கள் என்பது பழங்காலத்தில் வங்கி, முறுக்கு, கம்பி, பட்டை வளையல்கள் என்றவாறு இருந்தன. தற்போது ஒவ்வொரு நகை விற்பனை கூடங்களும் தனிப்பட்ட வடிவமைப்பாளரை கொண்டு கூடுதல் பொலிவு மற்றும் அழகம்சம் பொருந்திய வளையல்கள் உருவாக்கி தருகின்றன. இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று பெண்கள் தடுமாறுகின்றன.

பிளைன் வளையல்கள்

பிளைன் வளையல்கள் என்பது அதிக வேலைப்பாடுகள் இன்றி அன்றாட பயன்பாட்டிற்கு அனிய ஏற்ற வகையில் இருப்பன. இதன் மேற்புற பகுதியில் சிறு குழைவு அச்சுகள் மட்டுமே பதியப்படும். ஏனெனில் அதிக அழுக்குகள் மற்றும் தூசு சேராதபடிக்கும் அதே நேரம் தூர இருந்து பார்க்கும் போதும் வளைவுகள் தெரியும் படிக்கு அச்சு உருவாக்கப்பட்டு இருக்கும். குடும்பத்தில் உள்ள சற்று வயதான மற்றும் மத்திய வயது பெண்கள் விரும்பி அணிகின்ற மாடல்களாக பிளைன் வளையல்கள் உள்ளன. தினசரி அனைத்து பணிகளின் போது அணிந்திருந்தாலும் அதில் தேய்மானம் மற்றும் பொலிவிழப்பு போன்றவை ஏற்படாது என்பதால் பிளைன் வளையல்கள் இவர்களுக்கு பிடித்தமான ஒன்றாக விளங்குகிறது.

டிசைனர் வளையல்கள்

பட்டையான வளையல் அமைப்பின் மேற்புறம் பல வண்ண பூக்கள் மற்றும் வரைதல்கள் வண்ண எனாமல் உடன் வடிவமைக்கப்பட்டு தரப்படுவது டிசைனர் வளையல்கள் ஆகும். பல வண்ண எனாமல் மாற்றி மாற்றி உள்ளவாறும் சில மாடல்களில் மேற் எழுந்த அச்சு அமைப்பு உள்ளவாறு டிசைனர் வளையல்கள் உள்ளன. இதில் பட்டை என்பது உட்புறம் வளைந்து குழைவாக உள்ள அமைப்பும் இருக்கின்றது. டிசைனர் வளையல்கள் விழாக்களுக்கு அணிந்து சென்று பின் கழட்டி பாதுகாக்கும் வகையிலானவை. தொடர்ந்து அணிந்திட முடியாது.

அலுவலக பெண்களுக்கு ஏற்ற மெல்லிய வளையல்கள்

தற்போது அலுவலக பெண்கள் அணிகின்றவாறு மெல்லிய உருளை கம்பி அமைப்பில் விதவிதமான வளைவுகள் மற்றும் மாறுபட்ட தங்க அமைப்பு நடுவில் உள்ளவாறு அலுவலக பெண்களின் வளையல்கள் கிடைக்கின்றன. இதில் கம்பி அமைப்பு உருளை வடிவில் வருவதுடன் நடுவில் கற்கள் மற்றும் அச்சுகளுடன் மேல் எழுந்த சிற்ப அமைப்பு போன்றவை பதக்கமாக பொருத்தப்பட்டுள்ளன.

ஒற்றை கம்பி, இரட்டை கம்பி பின்னல்கள் உள்ளவாறும், மெல்லிய மாற்றகூடிய வளைவுகள் கொண்ட வளையல்களும் கிடைக்கின்றன. இவ்வளையல்களின் கீழ் பகுதியில் தொங்ககூடிய செயின் அமைப்பு, கரங்களில் பிரித்து மாட்டக்கூடிய திருகாணி கொண்ட அமைப்பு என இயக்க வசதிகள் அதிகமாக உள்ளன. அதுபோல் அலுவலகப் பெண்கள் மாற்றி மாற்றி அணிய ஏற்றவாறு விதவிதமான வடிவமைப்புடன் மிக எடை குறைந்தவாறு தங்க வளையல்கள் கிடைக்கின்றன.

வித்தியாசமான வடிவிலான சிறப்பு வளையல்கள்

தனிப்பட்ட கலைதிறன் வடிவத்துடன் சில சிறப்பு வகை வளையல்கள் கிடைக்கின்றன. மாறுப்பட்ட ஏற்ற இறக்கத்துடன் கம்பி அமைப்புகள் இணைக்கப்பட்டு வட்ட வடிவிலான வளையல்கள் உட்புற பகுதி வட்டமாகவும் மேற்புறபகுதி சதுர மற்றும் அறுங்கோண வடிவில் கற்கள் மற்றும் முனைபகுதிகள் செலுக்கல்களுடன் கூடிய வளையல்கள் கிடைக்கின்றன.

கட அமைப்பிலான பெரிய வளையல்கள் மற்றும் இரட்டை நிற சாயல் கொண்ட வித்தியாசமான வளையல்கள் அழகுடன் காட்சி தருகின்றன. இவை மட்டுமின்றி பெரிய வடிவிலான ஒற்றை வளையல்கள், கற்கள் பதித்த வளையல்கள், முத்து வளையல்கள் போன்றவை விதவிதமாய் காட்சி தருகின்றன.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker