சாதத்திற்கு அருமையான மட்டன் கீமா சாக்
மட்டனுடன், கீரையை சேர்த்து செய்யும் மட்டன் கீமா சாக் ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கீமா – 750 கிராம்
பசலைக்கீரை – 3 கட்டு
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
அரைத்த தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
மிளகுத் தூள் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீமாவை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
கழுவிய கீமாவில் எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் மல்லி தூள் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகுத் தூள், சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஊற வைத்துள்ள மட்டன் கீமாவை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
எப்போது மட்டனில் இருந்து தண்ணீர் வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அரைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் பசலைக்கீரையை சேர்த்து பிரட்டி, பின் உப்பு தூவி குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
கீமா மற்றும் கீரையானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூவி நன்கு பிரட்டி இறக்கினால், கீமா சாக் ரெடி!!!