அழகு..அழகு..புதியவை

முக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க…

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் மற்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அழகாக மற்றும் பொலிவாக இருக்கும் சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. களங்கமில்லாத சருமம் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

Coconut Oil for Face: 7 Ways to Use it For a Beauty Boost
களங்கமற்ற சருமம் பெறுவதற்கு ஆயிரம் ஆயிரமாக செலவழித்து அழகு நிலையங்களுக்கு செல்லவும் இன்றைய இளைஞர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அதற்கு தக்க தீர்வு கிடைக்கிறதா என்றால் ஆம் என்று 100% சொல்ல முடியாது. ஒரு சிறு முயற்சி உங்களுக்கு இந்த தீர்வை உண்டாக்கும். அந்த முயற்சி மிக எளிதாக கிடைக்கக்கூடியது. அது தேங்காய் எண்ணெய். மிக எளிதாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெய்க்கு அழகு சார்ந்த நன்மைகள் ஏராளம் கொண்டது.

தேங்காய் எண்ணெயின் நன்மைகள்

தேங்காய் எண்ணெயில் கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளது. அதனால் தேங்காய் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமான விருப்பமாக உள்ளது. அதன் நன்மைகள் பற்றிய பட்டியலை இப்போது பார்க்கலாம்.

* எடை இழப்பு

* டைப் 2 நீரிழிவு பாதிப்பில் இருந்து முன்னேற்றம்

* பல் அழுகுதல் மற்றும் ஈறு பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.

* பித்தப்பை நோய்களுக்கான அறிகுறிகள் குறைகிறது.

* செரிமானம் மேம்படுகிறது.

* ஆற்றல் அதிகரிக்கிறது

* கவனம் அதிகரிக்கிறது.

* நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

* அழற்சி குறைகிறது

* ஹார்மோன் சமநிலை அடைவதில் உதவுகிறது

* பூஞ்சை தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது

இவ்வளவு நன்மைகள் கொண்ட தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு உற்ற நண்பனாக திகழ்கிறது. தேங்காய் எண்ணெய் பல திறமைகள் கொண்ட ஒரு எண்ணெயாக விளங்குவதால், உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப அதனை மாய்ஸ்சுரைசர், க்ளென்சர் அல்லது சன் ஸ்க்ரீன் போல் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்தை குணப்படுத்த உதவுகிறது. இதற்கு காரணம் இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஆக்சிடெண்ட். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.

உங்களுடைய தினசரி அழகு சிகிச்சையில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தக் கூடிய 7 வழிகளை இப்போது பார்க்கலாம்.

பேஸ் வாஷ்

ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெய் 5 ஸ்பூன் சேர்க்கவும். இந்த கலவை சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறியவுடன் ஒரு ஜாரில் சேமித்து வைக்கவும். இது ஒரு அற்புதமான பேஸ் வாஷ் ஆகும்.

லிப் பாம்

நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு லிப் பாமிலும் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். வறட்சியான உதடுகள் மறைந்து விடும்.

இரவு க்ரீம்

நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசரில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த க்ரீமை முகத்தில் தடவவும். பருக்கள் அதிகம் உள்ள முகத்திற்கு இது நல்ல தீர்வைத் தரும். பருக்கள் அற்ற முகத்திற்கு தேங்காய் எண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவலாம்.

வேனிற்கட்டியில் இருந்து நிவாரணம்

கடுமையான சூரிய ஒளியின் தாக்கத்தால் உங்கள் மென்மையான சருமம் வறண்டு, அதனால் எரிச்சல்கள் ஏற்படலாம். இதனால் உங்கள் முகம் வயது முதிர்ந்த நிலையை அடையலாம். தேங்காய் எண்ணெய் சரும எரிச்சல் மற்றும் அரிப்பை போக்கி, சருமத்திற்கு நீர்ச்சத்தை மீட்டுத் தருகிறது.

மேக்கப் ரிமூவர்

முகத்தில் இருந்து மேக்கப்பை அகற்றுவது ஒரு பெரிய வேலை. மற்ற ரசாயனங்கள் பயன்படுத்தி முகத்தில் உள்ள மேக்கப்பை அகற்றுவதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மேக்கப்பை அகற்றலாம். இதனால் சருமத்தின் நீர்ச்சத்து அதிகரித்து மேலும் சருமம் மென்மையாக மாறும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும்.

பூச்சு கொல்லி

முகத்தில் கொசுக்கடித்ததால் உண்டாகும் தழும்புகள் சிலருக்கு அழகை குலைக்கலாம். அதனைப் போக்க எளிய வழி உள்ளது. தேங்காய் எண்ணெய்யுடன் உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெய்யை கலந்து முகத்தில் தடவுவதால் அந்த தழும்புகள் விரைவில் மறையும். சில மணி நேரம் தொடர்ந்து இதனை பின்பற்றலாம்.

முகத்திற்கு ஸ்க்ரப்

தேங்காய் எண்ணெய்யுடன் சர்க்கரை சேர்த்து ஒரு ஸ்க்ரப் போல் தயாரித்து முகத்தில் தேய்த்து வருவதால் சருமம் மென்மையாக மாறுகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை பின்பற்றலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker