கவிதைகள்
இதயமே எங்கு போகிறாய் – கவிதை
இதயமே எங்கு ஓடினாய்?
தனிமையில் நொந்து சாகிறேன்!
நீயின்றி என்ன செய்வது?
அவளிடம் என்ன சொல்வது?
என்னிதயமே…
திருடாமலே பறிப்போனதே
ஏனேனோ என்னிதயம்-அவள்
அனைக்காமலே பிரிந்தோடுமோ?
எனைவிட்டு என்னுயிரும்!
எந்தன் விழிசாபமா?
இல்லை உயிர்மோட்சமா?
மீண்டும் எனைச்சேருமா
இல்லை கரைந்தோடுமா
என்னிதயம்…
உனைப்பார்க்கவே ஓடோடுதே
எனக்காக என்னிதயம்!
நீயின்றியே நான்வாடினேன்
அதைக்காண முடியாமல்!!
நீயும் எனைச்சேரவே
எந்தன் மனம் கேட்டிடும்!
சொல்ல முடியாமலே
கீழே தலை சாய்த்திடும்!!!