ஆரோக்கியம்புதியவை

ஆண் குழந்தை வேண்டுமா?… ஆதிகாலத்தின் ரகசியம் இதோ…

அறிவியல் காரணங்களால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் அக்காலத்தில் தான் ஆண் குழந்தை வேண்டுமென்று பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப் பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள். ஆனால் குழந்தை பிறப்பதே கடினமாக உள்ள தற்போதைய மார்டன் காலத்திலும் சிலர் ஆண் குழந்தை தான் வேண்டுமென்று நினைக்கின்றனர்.




இதற்கு முக்கிய காரணம், பெண் குழந்தையை பெற்றெடுத்தால் நிறைய செலவு ஆகும். அதுவே ஆண் குழந்தை என்றால் வருமானம் என்று நினைப்பது தான். மேலும் எவ்வளவு தான் மார்டன் காலமாக மாறினாலும், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதித்து பார்க்க நமது அரசு தடை செய்துள்ளது.

 

பலர் ஆண் குழந்தை பிறப்பதற்கு என்ன வழியெல்லாம் உள்ளதோ அவற்றையெல்லாம் முயற்சிக்கின்றனர். இங்கு ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவி புரியும் ஒருசில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இது ஒன்றும் நம் முன்னோர்களின் மூடநம்பிக்கைகளுள் ஒன்றாக இல்லாவிட்டாலும், ஒருசில அறிவியல் காரணங்களால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.

சரி, இப்போது ஆண் குழந்தை பிறக்க உதவியாக இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

 வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும். எனவே ஆண் குழந்தை வேண்டுமென்பவர்கள், ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது நல்லது.


காலை உணவாக செரில்

ஆண் சிசு உருவாக அதிக அளவு ஊட்டச்சத்தானது தேவைப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த செரிலை காலை உணவாக எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

காளான்

நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் ஆண் சிசுவானது நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளவர்களுக்குத் தான் பிறக்கும்.



ஸ்டார்ச் நிறைந்த உணவுகள்

குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

கடல் உணவுகள்

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஆண்களின் விந்தணுக்களானது எவ்வளவு அதிகமாக கருப்பையினுள் நுழைகிறதோ அதைப் பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

உப்புள்ள உணவுகள்

சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்து வாருங்கள். முக்கியமாக கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.




தக்காளி

தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது. மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

அனைத்து கர்ப்பிணிகளுக்குமே வயிற்றில் வளரும் குழந்தை நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் நமது முன்னோர்கள் சொன்ன சில உணவுகளை உட்கொண்டு வருகின்றனர். மேலும் எவ்வளவு தான் படிப்பறிவு உள்ளவர்களாக இருந்தாலும், முன்னோர்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்பி, வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாவதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்கின்றனர்.

ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி, உண்மையில் வயிற்றில் வளரும் குழந்தையின் நிறமானது உண்ணும் உணவில் இல்லை. அது தாய் மற்றும் தந்தையின் நிறங்கள் கலந்து தான் பிறக்கும் என்று சொல்கின்றனர். இருப்பினும், இந்திய மக்களிடம் இந்த நம்பிக்கை மட்டும் போகாமல் இருக்கிறது.

அப்படி நீங்களும் உண்ணும் உணவுகளால் குழந்தையின் நிறம் அதிகரிக்கும் என்று நம்பினால், முன்னோர்கள் கூறிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய உணவுகளால் நிச்சயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சரி, இப்போது எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பார்ப்போம்.




குங்குமப்பூ பால்

நிறைய கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் குழந்தை வெள்ளையாக பிறப்பதற்கு குங்குமப்பூ பால் தான் குடிப்பார்கள். ஏனெனில் குங்குமப்பூவானது வயிற்றில் வளரும் குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான்.

தேங்காய்

வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டுமானால், தேங்காய் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் தேங்காயின் உட்பகுதி வெள்ளையாக இருப்பதால், இதனை உட்கொண்டால், வயிற்றினுள் வளரும் குழந்தையும் வெள்ளையாக பிறக்கும் என்ற நம்பிக்கையினால் தான்.

பால்

கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். ஏனென்றால் பாலை கர்ப்பிணிகள் அதிகம் குடித்தால், பால் போன்ற நிறத்தில் குழந்தை பிறக்குமாம்.

முட்டை

கிராமங்களில் உள்ள சில மக்கள், கர்ப்பிணிகள் இரண்டாம் மூன்று மாத காலத்தில் முட்டையை அதிகம் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று சொல்கின்றனர்.

பாதாம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பாதாமை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை நல்ல நிறத்தில் பிறக்கும் என்ற நம்பிக்கையும் நம் இந்திய மக்களிடையே உள்ளது. அதிலும் பாதாம் பாலை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தை நன்கு வெள்ளையாக பிறக்கும் என்று சொல்கின்றனர்.

நெய்

ஆய்வுகளின் படி கர்ப்பிணிகள் நெய்யை உணவில் சேர்த்து வந்தால், பிரசவத்தின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். ஆனால் மற்றொரு பக்கம், நெய் சாப்பிட்டா,ல அது குந்தையின் சரும நிறத்தை அதிகரிக்கும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருக்கட்டும், கர்ப்பிணிகள் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்ப்பது மிகவும் நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker