இதெல்லாம் தெரியாமகூட செகண்ட் ஹேண்டாக வாங்கிடாதீங்க….
பொதுவாக நாம் இரண்டாம் தரமாக சில பொருள்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, கார், ஃபிரிட்ஜ் போன்றவை. ஆனால் சில பொருள்கள் இண்டாம் தரமாக வாங்கியபின், அதைவிட இரண்டு மடங்கு செலவு வைத்துவிடும்.
அதனால் சில பொருள்களை மட்டும் இரண்டாம் தரமாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி என்னென்ன பொருள்களை செகண்ட் ஹேண்டாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்?…
மெத்தை :
ஏற்கனவே யாரவது பயன்படுத்திய மெத்தையை எப்போதும் வாங்கக் கொடாது. இதற்கான முக்கியமான காரணம் மூட்டை பூச்சிகள். மூட்டை பூச்சியை வீட்டிற்கு கொண்டு வருவது போன்ற ஒரு அசம்பாவிதம் வேறு எதுவும் இல்லை என்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். மேலும் ஒரு மெத்தையின் ஆயுட்காலம் 7 முதல் 10 ஆண்டுகள் தான். அது மட்டுமில்லாமல், ஏற்கனவே பயன்படுத்திய மெத்தை என்பதால் அதற்கு உண்டான தன்மையை இழந்து காணப்படும். சில நேரம் அதன் உள்ளிருக்கும் பஞ்சுகள் வெளிப்பட்டும், தளர்ந்தும் காணப்படலாம்.
பைக் ஹெல்மெட் :
குழந்தைகளின் விளையாட்டு பைக்கிற்கு வாங்கும் ஹெல்மேட்டாக இருந்தாலும், உங்கள் இரு சக்கர வாகனத்திற்காக நீங்கள் பயன்படுத்த வாங்கும் ஹெல்மேட்டாக இருந்தாலும், புதிய தரம் வாய்ந்த பிராண்ட் ஹெல்மெட்டை மட்டுமே வாங்கவேண்டும்.. ஒரு முறை விபத்தில் சிக்கிய ஹெல்மெட்டை தூக்கி எறிவது நல்லது. இதனை நமக்கு சொல்பவர், வாஷிங்டனில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு வக்கீல், நீல் கொஹேன் அவர்கள். விபத்துகளில் சிக்காத ஹெல்மேட்டாக இருந்தாலும், ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவற்றுள் உள்ள பஞ்சு சேதமடையலாம் என்றும் அவர் கூறுகிறார். மேலும், நுகர்வோர் தயாரிப்புகள் பாதுகாப்பு ஆணையம் (CPSC) அடிக்கடி பாதுகாப்பு விதிகளை புதுப்பித்துக்கொள்கிறது, மேலும் நீங்கள் உங்கள் பாதுகாப்பை பற்றி எந்த நேரத்திலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கார் சீட் :
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் தயிர் போல, கார் சீட்டிற்கும் காலாவதி தேதி உண்டு. ஒரு விபத்திற்கு பின் பைக் ஹெல்மெட் போல இதையும் மாற்ற வேண்டும். காரின் முந்தைய உரிமையாளர் எப்படி காரை கையாண்டிருப்பார் என்பது நமக்கு தெரியாது. எதாவது ஒரு விபத்தில் சிக்கி, கார் சீட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதும் நமக்கு தெரியாது. எதாவது ஒரு பகுதி, மாற்றம் செய்யப்பட்டுள்ளதா அல்லது புதிய பொருள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது எதுவம் தெரியாது என்று கொஹேன் கூறுகிறார்.
தொட்டில் :
குழந்தையை உறங்க வைக்கக் கூடிய இடமாகிய இந்த தொட்டிலை போல் பாதுகாப்பான இடம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தொட்டிலை செகண்ட் ஹேன்ட் பயன்பாட்டிற்காக வாங்குவது வேண்டாம் என்று கொஹேன் கூறுகிறார். தொட்டில் பார்ப்பதற்கு புதிது போல் தோன்றினாலும், அதன் மறை எளிதில் விலகக் கூடிய நிலையில் இருக்கலாம். மெத்தைக்கும் தொட்டிலும் இடைவெளி அதிகம் இருக்கலாம். சில தொட்டிலில், குழந்தையை எளிதாக தூக்கும் விதத்தில் தொட்டிலின் இரண்டு பக்கங்களும் எளிதில் ஏற்றி இறக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஃபுட் புராசஸர் (Food Processor)
கூர்மையான ப்ளேடுகள் மூலம் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது சரியான நிலையில் இயங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு வாங்க வேண்டும் என்று கொஹேன் கூறுகிறார். சென்ற டிசம்பர் மாதம், 8 மில்லியன் உணவு பதனாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இயங்கும்போது இதன் ப்ளேடுகள் உடைந்து உணவு பொருட்களில் கலந்து விடுவதே பறிமுதல் செய்யப்பட்டதற்கான காரணம் ஆகும்.
லேப் டாப்
லேப் டாப் அதன் முதல் உரிமையாளரிடம் பல்வேறு வகையில் பயன்பட்டிருக்கலாம். அது சரியானபடி வேலை செய்யும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் கிடையாது. பணத்தை மிச்சப்படுத்த செகண்ட் ஹேன்ட் லேப் டாப் வாங்குவதை விட, நம்பகமான கடையில் நல்ல தரமான லேப் டாப் வாங்குவதால் , தொழில் நுட்ப தொடர்பான உதவியையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இத்தகைய பொருட்களுக்கான வாரண்டியும் கிடைக்கும்.
விலங்கு பொம்மை :
சில விலங்கு பொம்மைகளின் உட்புறம் மென்மையான நார் அல்லது பஞ்சால் நிரப்பப்பட்டு மேலே துணியால் தைத்து விற்கப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அழகாகவும், தொட்டால் மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் இவற்றில் அதிகம் ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக செகண்ட் ஹேன்ட் பொம்மையை வாங்க வேண்டாம். அவற்றுள் மூட்டை பூச்சிகள் , பேன் , கிருமி என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் துணியில் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் இருந்து நம்மை பயமுறுத்தலாம். இதனை விட சிறிய பொம்மையாக இருந்தாலும் புதிய பொம்மையை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கலாம்.