பிரெட் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் – 6
தக்காளி – 2 ,
வெங்காயம் – 2
சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
குடைமிளகாய் – 1 சிறியது,
கொத்தமல்லி – சிறிதளவு,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
கொத்தமல்லி, குடை மிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து சாறெடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் பிரட் துண்டுகளை நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள்.
கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி அலங்கரியுங்கள்.