தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் வேண்டாம்

குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் குழந்தைகளின் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோடு நிற்காமல், அவர்களின் கண், காது, மூக்கு ஆகியவற்றிலும் எண்ணெய் விடுவார்கள். இது முற்றிலும் தவறானதும், ஆபத்தானதும்கூட என்பதை பெற்றோர் மறந்து விடக்கூடாது.

ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட வேண்டாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம்.

அதுவும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றினை அப்படியோ அல்லது லேசாக சூடுபடுத்தியோ பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் போன்ற அதிக அடர்த்தியுடைய எண்ணெய்கள் பயன்படுத்தும்போது அவற்றின் எண்ணெய் பசை போக அதிக நேரமாகும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட்ட 15-20 நிமிடங்களுக்குள் குளிக்க அழைத்துச் சென்றுவிட வேண்டும். எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டும் சமயத்தில் அதிக சூடான, அதிக குளிர்ச்சியான நீரினைத் தவிர்த்து மிதமான சூடுள்ள நீரைக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.

குறிப்பாக எண்ணெய் பசை நன்றாக போகும் அளவிற்கு சிகைக்காய், அரப்பு, மைல்டு ஷாம்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி 10-15 நிமிடங்களுக்குள் குளிப்பாட்டிவிட வேண்டும். பின்னர் தலைமுடியில் ஈரப்பதம் போகும் வரை நன்றாகத் துடைத்துவிட்டு சராசரியாக ஐந்து நிமிடங்கள் மிதமான வெயிலில் தலைமுடியை உலர்த்தச் செய்யலாம். இதனால் தலையில் நீர் தங்காது. குழந்தைகளின் தலைமுடியை உலர்த்த டிரையரைப் பயன்படுத்தக்கூடாது.

மசாஜ் செய்வதைப் பொறுத்தவரையில் 1-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித மசாஜ் முறைகளையும் செய்யாமல் குழந்தையின் உடலில்  எண்ணெய் தடவி பெரியவர்கள் தங்கள் கைகளால் மட்டும் லேசாக தேய்த்துவிட்டாலே போதும்.

குறைப் பிரசவத்தில், எடைக் குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உடலில் எண்ணெய் தேய்த்தோ அல்லது லைட் மசாஜ் செய்தோ குளிப்பாட்டலாம். இவ்வாறு செய்வதால் நரம்பு மண்டலம், தசைப்பகுதிகளும் நன்றாக செயல்பட தூண்டிவிடும்.

Related Articles

23 Comments

  1. 365PowerSupply.com is a professional and reliable power supply trading and wholesale provider that offers a wide range of replacement power supplies for popular brands like Dell, HP, Lenovo/IBM, and server workstation components. With a focus on quality and affordability, they offer an extensive selection of products at competitive prices. Whether you need a power supply for your business or personal use, 365PowerSupply.com is committed to providing excellent service and support to ensure that you get the right product for your needs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker