உறவுகள்புதியவை

நீங்க நல்ல கணவரா? 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா? இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க!

இது ஒரு சிறிய, எளிய தேர்வு தான். ஐந்து நிமிடத்தில் இந்த தேர்வு முடிந்துவிடும். இந்த தேர்வை எழுத போவதும் நீங்கள் தான், உங்கள் பதிலுக்கான மதிப்பெண் போட்டுக் கொள்ள போவதும் நீங்கள் தான்.இங்கே நீங்கள் காபி அடிக்க முடியாது. ஏனெனில், நீங்கள் கூறப்போகும் விடை உங்கள் இல்லற வாழ்க்கை குறித்து. இங்கே நீங்கள் தவறான பதிலை கூறுகிறீர்களா என்று கண்காணிக்க யாரும் இல்லை. உங்கள் மனசாட்சி மட்டுமே நீங்கள் கூறும் பதிலுக்கு சாட்சி. இங்கே இருபது கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் ஆம், இல்லை என்ற இரண்டே பதில்கள் தான். ஆம் என்றால் உங்கள் மார்க் பட்டியலில் ஐந்து மதிப்பெண் நீங்கள் கூட்டிக் கொள்ளலாம். இருபது கேள்விகளின் முடிவில் நீங்கள் நூற்றுக்கு எத்தனை மதிப்பெண் பெற்றுள்ளீர்கள் என்று கணக்கிடுங்கள். நீங்கள் வாங்கிய மார்க்கை கொண்டு நீங்க எந்த கிரேடு ஹஸ்பெண்டு என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.



01. லாங் ரைடு! உங்க மனைவி மன சோர்வாக இருக்கும் போது பைக் இல்ல கார்ல லாங் ரைடு கூட்டி சென்றதுண்டா…? கார், பைக் இல்லை என்றாலும், அவருடன் கைகோர்த்து சாலை ஓரம் ஒரு மாலை வேளையில் நடந்து சென்றுள்ளேன் என்றாலும் கூட பரவாயில்லை அது பதிலாக எடுத்துக் கொள்ளலாம். போயிருக்கீங்களா? 0/5 – ?

02. மாதவிடாய் நாட்கள்! உங்க மனைவிக்கு மாதாமாதம் அந்த மூன்று நாட்கள் முடியாமல் போகும். அந்த நாட்களில் அவர்கள் எதிர்கொள்ளும் முழுமையான வலியை அவர்களும் கணவரிடம் கூற மாட்டார்கள். அவர்கள் கூறினாலும் கணவர்களுக்கு அது முழுமையாக புரியாது. ஆனால், அவர்கள் வலியில் முடியாமல் தவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து வீட்டு வேலைகளை நீங்களாக எடுத்து செய்ததுண்டா? 0/5 – ?

03. வார இறுதி சமையல்! வாரம் முழுக்க அவள் தானே சமைக்கிறாள், வார இறுதியில், குறைந்தபட்சம் ஞாயிறு மதிய உணவாவது சமைத்துக் கொடுத்தது உண்டா…? சமைக்க தெரியாது ஆனால் காய்கறி நறுக்கி தருவேன். என்னால் முடிந்தது அல்ல தெரிந்ததை தானே செய்ய முடியும் என்று கூறும் கணவர்கள் இரண்டரை மதிப்பெண் போட்டுக் கொள்ளலாம்… 0/5 – ?

04. சொந்த விருப்ப, வெறுப்பு! உங்கள் மனைவியின் சொந்த விருப்ப, வெறுப்பை உங்களது விருப்ப, வெறுப்பு காரணத்திற்காக தடை விதிக்காமல். எனக்கு பிடிக்காட்டி என்ன, உனக்கு பிடிச்சிருக்குல நீ பண்ணு என்று ஊக்கவித்தது உண்டா? 0/5 – ?

05. தோழிகளுடன் அவுட்டிங்! நீங்கள் எப்படியும் நினைக்கும் போதெல்லாம் பொய் சொல்லிவிட்டாவது நண்பர்களை கண்டு வந்துவிடுவீர்கள். ஆனால், அவர்கள் தோழிகளை காண வேண்டும் என்று கேட்கும் போது, அதெல்லாம் வேண்டாம், வேணும்னா வீட்டுக்கு அழைத்து பேசு என்று கோபப்படாமல், பார்த்து போயிட்டு வா, ஏதாவது ஹெல்ப் வேணுமா என்று கேட்டதுண்டா? அல்லது அவர்கள் வெளியே சென்று வர ஏதனும் ஐடியாக்கள் பகிர்ந்துக் கொண்டதுண்டா? 0/5 – ?

06. ஆளுமை! என்னை விட என்னோட மனைவிக்கு ஆளுமை திறமும், வீட்டு மேலாண்மை திறனும் அதிகம். அதனால, அவதான் எல்லாத்தையும் கரக்டா பார்த்து பார்த்து பண்றா என்று… அவரிடம் கூறாவிட்டாலும், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி மகிழ்ந்துக் கொண்டதுண்டா? 0/5 – ?

07. பாராட்டு! உங்கள் மனைவி செய்யும் விஷயங்கள், அவர் வேலையில் சாதித்த விஷயங்களுக்கு பாராட்டியதுண்டா? சில கணவர்கள், ஊரே தனது மனைவியை பாராட்டினாலும், இவர்கள் அடுத்த வேளைக்கு என்ன சோறு என்று கேட்டு மனம் நோக செய்வார்கள். இப்படி எல்லாம் இல்லாமல் நான் வாய் நிறைய பாராட்டியுள்ளேன் என கூறும் நபரா நீங்க…? 0/5 – ?

08. தட்டிக்கொடுத்தல்! உங்கள் மனைவி தவறு செய்த போது, அதற்கு அவரை திட்டாமல், தட்டிக்கொடுத்து இது தவறு, இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளீர்களா? இல்லையேல், ஒரு தோல்வியில் உங்கள் துணை மனம் நொந்து காணப்பட்டால், அதில் இருந்து மீண்டு வர உதவியது உண்டா? 0/5 – ?

09. தாம்பத்தியம்! உங்கள் மனைவியை தாம்பத்திய உறவில் ஈடுபட வற்புறுத்தியது இல்லை, எனக்காக அவரது விருப்பம் இன்றி கட்டாயப்படுத்தியது இல்லை? தாம்பத்திய உறவில் அவரது விருப்பத்திற்கு எதிராக நடந்துக் கொண்டதில்லை என்று கூறும் நபரா நீங்க? 0/5 – ?

10. மன்னிப்பு! ஏதேனும் சண்டையின் போது, அவரை அழவைத்து.. பிறகு தவறு உங்கள் மீது தான் என்று அறிந்து தயங்காமல் மன்னிப்பு கேட்டதுண்டா… இல்லை தவறு அவள் மீது என்றும் அறிந்தும் கூட, அவர் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல்… நாமே மன்னிப்பு கேட்போம்.. குடியா மூழ்கிவிடும் என்று கருதி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது உண்டா? 0/5 – ?

11. போன்கால்! அலுவலகத்தில் எத்தனை பிஸியாக இருந்தாலும், இடைவேளை நேரங்களில் சரியாக கால் செய்து சாப்பிட்டியா, என்ன பண்ற? என்று கேட்டுவிடுவேன். என் மனைவி எங்கேனும் வெளிய சென்றால், மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர் என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார் என்பதை கால் செய்து கேட்டறிந்துக் கொள்வேன் என்று கூறும் நபரா நீங்க? 0/5 – ?

12. உடல்நலம்! உங்கள் மனைவியின் உடல்நலம் சீரின்றி போகும் போது, அவருக்கு அனைத்து வகையிலும் உதவியுள்ளேன். அவரது உடலில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று A2Z எனக்கு தெரியும் என்று நூறு சதவிதம் உங்களால் கூற முடியுமா? 0/5 – ?

13. முத்தம்! சிலர் திருமணமாகி ஐந்தாறு ஆண்டுகள் கழிந்தபிறகு முத்தமிடுவதையே மறந்துவிடுவார்கள். ஆனால், ஆரம்ப காலத்தில் முத்தமிடாத நாட்களே இருந்திருக்காது. அப்படி திருமணமான நாள் முதல், இன்று வரை நான் அவளை முத்தமிட மறந்ததே இல்லை என கூறும் நபரா நீங்க? 0/5 – ?

14. மாலை கொஞ்ச நேரம்! வேலை முடித்து மாலை வீடு திரும்பியதும், வேலையில் இருந்த டென்ஷன் எல்லாம் மனைவி மீது காண்பிக்காமல், அவர் அருகே அமர்ந்து, அவரது அன்றைய நாள் எப்படி சென்றது வீட்டில் அவர் என்ன செய்தார், அவர் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று கேட்டு அன்றைய தினத்தை பற்றி விசாரித்ததுண்டா? 0/5 – ?

15. மார்கெட்! வெளியே செல்லும் போது மார்க்கெட் வழியே செல்லவிருப்பதை முன்னரே அறிந்திருந்தால்,,, மார்கெட் வழியா தான் போறேன்… வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு வர வேண்டுமா? என்று கேட்டு வீட்டுப் பொருட்கள் வாங்கி வந்து கொடுத்ததுண்டா? 0/5 – ?

16. நாப்கின்! எப்படியும் அடுத்த மாசமும் உங்கள் மனைவிக்கு மாதவிடாய் வரும் என்று தெரியும், அதை முன்கூட்டியே அறிந்து அவருக்கு உதவும் வகையில் கூடுதலாக நாப்கின் வாங்கி வீட்டில் வைத்ததுண்டா. அல்லது அவர் வேண்டும் என்று கேட்ட தருணத்தில் உடனே சென்று வாங்கி வந்துக் கொடுத்ததுண்டா? 0/5 – ?

17. மிஸ் யூ! உங்க மனைவி வெளியூர் போன நேரத்தில், நீங்கள் வெளியூர் போன நேரத்தில், உறவினர் வீட்டுக்கு சென்று ஓரிரு நாள் தங்கிய வேளைகளில், வேலை காரணமாக அவர்களுடன் பேச முடியாமல் காலங்களில் அவருக்கு மிஸ் என்று கால் செய்து கூறியதுண்டா? அட்லீஸ்ட் ஒரு குறுஞ்செய்தி…? 0/5 – ?

18. பிடித்தவை! நிச்சயம் இல்லற உறவின் ஆரம்பத்திலேயே உங்கள் மனைவிக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது என்று அறிந்திருப்பீர்கள். சிலர் சில வருடங்களில் மறந்தும் இருப்பீர்கள். ஆனால், எப்போதும் அவளுக்கு பிடித்தவற்றை எங்காவது கண்டால் அவளுக்கு வாங்கி தர மறந்ததே இல்லை எனும் கணவரா நீங்கள். பிடித்தது என்பது புடவை நகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பானிப்பூரி, மசால் வடையாக கூட இருக்கலாம். வாங்கி கொடுத்திருக்கீங்களா? 0/5 – ?

19. எதிர்ப்பு! பாசம் காட்டுறது மட்டுமே கணவனுக்கான கடமை என்று நினைத்தால் தவறு. மனைவி தவறு செய்கிறார், அவர் செய்யவிருக்கும் வேலை தவறாக முடிய வாய்ப்புகள் இருக்கிறது எனில் அதற்கான எதிர்ப்பை அப்போதே காட்டிவிட வேண்டும். ஆனால், அந்த எதிர்ப்பை கோபமாக காட்டாமல், அதன் எதிர்வினைகள் எப்படியானதாக இருக்கும் என்பதை விளக்கி கூறுதல் வேண்டும். இப்படி ஏதேனும் சந்தர்பத்தில் கூறியது உண்டா? 0/5 – ?

20. கண்ணாலயே! உங்க மனைவி கிட்ட கண்ணால பேசியிருக்கீங்களா? உங்கள் மனைவியோட பார்வை வெச்சு அவங்க என்ன நினைக்கிறாங்க, சொல்ல வராங்கனு கரக்டா கண்டுபிடிக்க தெரியுமா? அவங்க கண்ணுல உங்களுக்கு பயப்படனும்ங்கிற உணர்வ தவிர, எல்லா உணர்வையும் பார்த்து, அதுக்கு ஆறுதலா, சரியான பதில கொடுத்திருக்கீங்களா? 0/5 – ? ரிசல்ட்! இந்த சுய மதிப்பீடுல ஃபிராடு தனம் பண்ணாம நேர்மையா விளையாடி இருப்பீங்க. காரணம், இங்க உங்க மனச தவிர வேற எந்த கண்காணிப்பாளரும் இல்லை. 95 – 100 : சபாஷ் உங்களை மாதிரி ஆட்கள விரல் விட்டு எண்ணிடலாம். பெஸ்ட் ஹஸ்பெண்ட்!!! 75 – 95 : ஒருசில விஷயங்கள் குறித்து உங்ககிட்ட உங்க மனைவி புலம்பினாலும், அவங்க எல்லா ஃபிரெண்ட்ஸ் கிட்டயும் உங்கள பெருமையா பேசுவாங்க. நீங்களும் நல்ல கணவர் தான்! 50 – 70 : நீங்க கொஞ்சம் முசுடா இருக்கலாம். சில விஷயங்கள்ல இன்னும் பிற்போக்கு எண்ணங்கள் இருக்கலாம். ஏவறேஜ் ஹஸ்பெண்ட்! 50 க்கும் குறைவு : 35க்கு கம்மியா வாங்குனா தானே ஃபெயில் என்று இன்னும் கீழே தேட வேண்டாம். இது வாழ்க்கை. பாதியளவு கூட மார்க் எடுக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் கவலைக்கிடம் தான்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்ன்னு எல்லாம் சொல்றதுக்கு இது பெப்சி உங்கள் சாய்ஸ் இல்ல. வரும் நாட்களில் இன்னும் உங்கள் மனைவியை நன்கு புரிந்து நடந்து கொண்டால் இல்வாழ்க்கை இப்போது இருப்பதை காட்டிலும் பலமடங்கு இன்பம் நிறைந்து காணப்படும்.

 

Related Articles

16 Comments

  1. I think this is among the so much vital info for me. And i’m happy reading your article. But wanna remark on few common issues, The site style is wonderful, the articles is really excellent : D. Just right job, cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker