சமையல் குறிப்புகள்

தித்திப்பான மாம்பழ அல்வா

இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • மாம்பழக் கூழ் – 2
  • ரவை – கால் கப்
  • நெய் – தேவையான அளவு
  • சர்க்கரை – கால் கப்
  • முந்திரி பருப்பு – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்



செய்முறை :

  • முந்திரியை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.
  • மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது நெய் ஊற்றி அது உருகியதும் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் வாணலியில் சர்க்கரையை கொட்டி, அதனுடன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
  • அடுத்து அதில் ரவையை கொட்டி கிளறவும்.
  • ரவை நன்றாக வெந்ததும் மாம்பழக்கூழ், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
  • அதனுடன் நெய் சேர்த்து வேக வைக்கவும்.
  • நெய் நன்றாக பிரிந்து வந்ததும் இறக்கி, முந்திரி பருப்பு சேர்த்து ருசிக்கலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker