சமையல் குறிப்புகள்

சூப்பரான பாலக் புலாவ்

தேவையான பொருட்கள் :

  • பாசுமதி அரிசி – 1 கப்
  • பாலக்கீரை – 1 கப்
  • வெங்காயம் – 2
  • வெங்காயத்தாள் – 1 கட்டு
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சிபூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • முந்திரிபருப்பு – 10




தாளிக்க:

  • பட்டை – 1
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:

  • பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் ஊறவைத்த அரிசியுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
  • விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
  • சூப்பரான பாலக் புலாவ் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker