இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் கொண்டிருக்க நிச்சயம் கிடையாது. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே காட்டுகின்றது. நீங்கள் தான் கண்டு கொள்வதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முதல் அறிகுறி அடிக்கடி மயக்கம் வருதல். தலை சுத்தல், அடுத்து அதிக உணவு சாப்பிட்டது போல் மூச்சி விட முடியாமல் ஒரு நிமிடம் வரை கஷ்டப்படுதல். இரவில் நல்ல உறக்கத்தில் திடீரென விழிப்பது அப்போது ஏற்படும் சிறு மூச்சுத் திணறல், அதிக வேர்வை, அதிக தண்ணீர் தாகம்.
அடிக்கடி சிறு நீர் கழிப்பது, காரணமின்றி ஏற்படும் படபடப்பு, இவை அனைத்துமே மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை குறிக்கும் அறிகுறிகளாக இருக்கலாம். அதனால் இவை ஏற்படும் போதே வைத்தியரை நாடி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இவை ஏற்படுகின்றது. அதனால் இப்படியான அறிகுறிகள் தென்படும் போது கவனத்தில் இருங்கள். மாரடைப்பு எனும் மரணத்தின் பிடியில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!