தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் உடல் உபாதைகளுக்கு பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவி முறைகள்

குழந்தைகளுக்கு வரும் சின்னசின்ன உடல் பிரச்சனைகளுக்கு ஒரு சில தீர்வுகள் என்பது இருக்க தான் செய்கிறது. அத்துடன் பெற்றோர்கள் ஒரு சில முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.

மலச்சிக்கல்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

தேங்காய் பால்



வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

வீடு சுத்தம் செய்தல்

சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். சின்னக்குழந்தைகள் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.

உணவு

டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.

கால்சியம்

உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், ‘கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

வசம்பு



‘குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

பால்

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

புதினா இலைகள்

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.

பேரீச்சை

குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker