கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்
“தலைமுடி” என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். சூரியக் கதிர்களின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது. முடிக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அதன் நிறத்தையும் இழக்கிறது. எனவே, முடிக்கு அவ்வப்போது பாதுகாப்பு தர வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகும். அதுமட்டுமின்றி அவ்வாறு சரியான பாதுகாப்பு கொடுக்காவிட்டால், முடி உதிர்தல் ஏற்பட்டு, நாளடைவில் வழுக்கையை அடைய நேரிடும்.
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது. அதுவும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் நிறைய இருப்பினும், ஒருசில இந்திய எண்ணெய்களும் முடியை நம்ப முடியாத வகையில் ஆரோக்கியத்துடன் வைக்கிறது. அத்தகைய எண்ணெய்கள் முடி வளர்ச்சியுடன், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாப்பதோடு, அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் தலையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும், இந்திய எண்ணெய்கள் சரிசெய்யக்கூடிய வகையில் அதற்கு சக்தி உண்டு. இந்த எண்ணெய்களைப் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்:
நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.
தேங்காய் எண்ணெய்:
இந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் “வைட்டமின் ஈ” அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.
மருதாணி எண்ணெய்:
மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.