தம்பதியர் இணைந்து செய்யும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள்
தாம்பத்திய உறவுக்கு அடிப்படையே புரிதல்தான். கணவன் மனைவிக்கு இடையில் உடல் மீதான கவர்ச்சி இயல்பாகவே இருக்கக் கூடியது. அதனை உடற்பயிற்சியின் வழியாக எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
* உடற்பயிற்சியால் ஆண், பெண் பிறப்புறுப்புப் பகுதிகளில் சீரான ரத்த ஓட்டம் உற்சாகத்தை அள்ளித்தரும்.
* உடல் சக்தி பெறுவதால் மூட் மாற்றங்கள் இன்றி எந்த எல்லையையும் எட்டித்தொடலாம்.
* எடை தூக்கும் பயிற்சிகளால் ஆணின் தோள், நெஞ்சு, வயிறு மற்றும் பாதங்களை வலிமை அடைகிறது. டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரித்து காமப் பொழுதில் அன்பின் போர்க்களம் காண்பதற்கான ஆர்வத்தையும், வலிமையையும் வழங்குகிறது.
* உடலுறவும் கூட ஒருவிதமான உடற்பயிற்சியே. உடலின் கலோரிகளை எரித்து சக்தி அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டுகிறது. ஆணுக்கு இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைத்து இதயத்துக்கு இதம் அளிக்கிறது.
* உடலுறவில் ஆர்வம் அதிகரிக்க ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி பெருக வேண்டும். மழை வெள்ளம் போல் மனதில் காமத்தின் கரைகளை உடைக்கும் வேலையை டெஸ்டோஸ்டிரோன் செய்கிறது. இதற்கும் உடற்பயிற்சியே உதவுகிறது.
* பெல்லி டான்ஸ் பெண்ணின் வயிற்றுப்பகுதி மற்றும் பின்பக்கத்தில் சேரும் கொழுப்பைக் கரைத்து செக்சியான தோற்றத்தைத் தக்க வைக்க உதவுகிறது.
* இணையுடன் கரம் கோர்த்துச் செல்லும் நடைபயணங்கள் உணர்வுப்பூர்வமாய் இணைத்து வைக்கிறது. ஏரோபிக் பயிற்சிகளும் செக்ஸ் உறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. காமத்தைக் கடிகாரத்துக்குக் கட்டுப்படாமல் கொண்டாட வைக்கிறது.
* தம்பதியர் இணைந்து ஆடும் சல்சா, டாங்கொ, பால்ரூம் டான்ஸ் (Salsa, tango and ballroom dance) அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த நடனங்களில் உள்ள அங்க அசைவுகள் செக்சுவலாகவும், நீவேறு நான் வேறு அல்ல என்பதை உணரச் செய்கிறது.
* தசைகள் வலிமையுற்று, ரத்த ஓட்டம் உற்சாகம் பெற்று உடல் காற்றுப் போல இயங்கினால் கடலின் கரைகளை நுரையால் நனைக்கும் அலைகளாய்… துவங்கி அலைகடலாய் காமப் பெருங்கடலில் விதம் விதமாய் நீந்தி விளையாடி முத்தெடுக்கும் வேளையில் மூச்சு முட்ட நெற்றியில் முத்தத்தால் முத்திரை பதிக்கலாம்.