சமையல் குறிப்புகள்

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப்

தேவையான பொருள்கள் :

  • முருங்கைக்காய் – 20 கிராம்
  • பயத்தம் பருப்பு – 25 கிராம்
  • வெங்காயம் – 4
  • தக்காளி – 2
  • மிளகு – 5 கிராம்
  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • தேங்காய் பால் – 100 மி.லி
  • நெய் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு




செய்முறை:

  • முருங்கைக்காயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  • பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
  • சுவையான, ஆரோக்கியமான முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப் தயார்.

 



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker