ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.