சமையல் குறிப்புகள்

சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபிள் குருமா

தேவையான பொருட்கள் :

  • கேரட் – 2
  • பீன்ஸ் – 15,
  • பட்டாணி – கால் கப்,
  • உருளைக்கிழங்கு – 2
  • பெரிய வெங்காயம் – 2,
  • தக்காளி – 3,
  • தேங்காய்த் துருவல் – 1 கப்,
  • பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்,
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கு.




தாளிக்க:

  • பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2,
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க:

  • இஞ்சி – 1 துண்டு,
  • பூண்டு – 5 பல்,
  • சோம்பு – அரை டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் – 5.




செய்முறை :

  • கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
  • தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
  • தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
  • அருமையான வெஜிடபிள் குருமா ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker