சமையல் குறிப்புகள்

காரசாரமான மிளகு சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – ஒரு கப்,
  • மிளகு – ஒரு டீஸ்பூன்,
  • நெய் – 2 டீஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.




செய்முறை:

  • முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும்.
  • அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
  • மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
  • சத்தான சுவையான மிளகு சப்பாத்தி ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker