செட்டிநாடு மட்டன் கிரேவி
மட்டன் – 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பில்லை – 2 கொத்துகள்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கிரேவிக்கு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1 (பெரியது)
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
கல் பாசி – 2
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 5 கொத்துகள்
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 – 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
கிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.
பிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.
சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்!