அன்பான, அழகான வாழ்க்கைத்துணை வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஏனெனில் நம் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுத்து அதனை அழகாக்க போகிறவர்களே நமக்கு வரப்போகிற வாழ்க்கைத்துணைதான். நமக்கான வாழ்க்கைத்துணையை நாமே தேர்ந்தெடுக்க கடவுள் கொடுத்த வழிதான் காதல். காதலில் மட்டும்தான் சரியான வாழ்க்கைத்துணை கிடைப்பார்களா என்றால் நிச்சயம் இல்லைதான், ஆனால் காதலின்றி யாராலும் நல்ல வாழ்க்கைத்துணையாக இருக்க முடியாது. காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ நீங்க சரியான உறவில்தான் இருக்கிறீர்கள், நீங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக்க போகிறார்கள் என்பதை உங்களுக்குள் ஏற்படும் சில மாற்றங்களே உங்களுக்கு உணர்த்தும்.
இதனை காதல், விஞ்ஞானம், விதி என எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் என்பது மட்டும் உண்மை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் உங்களை சிறப்பாக உணரச்செய்வார்கள் நீங்கள் உங்களுக்கான சரியான வாழ்க்கை துணயோடு இருந்தால் அவர்கள் உங்களை எப்பொழுதும் சிறப்பாக உணர வைப்பார்கள். உங்களை வாழ்க்கையில் முன்னோக்கி நகர்த்துவார்களே தவிர ஒருபோதும் பின்னோக்கி இழுக்க மாட்டார்கள். பிணைப்பு உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உள்ள உறவானது வார்த்தைகளால் விவரிக்க முடியாததாக இருக்கும். அவர் ஒருவரிடம் மட்டும் ஏன் இப்படிப்பட்ட பிணைப்பு இருக்கிறது என்பது உங்களுக்கே புரியாததாக இருக்கும்.
வீட்டில் இருப்பது போன்ற உணர்வு அவர்களுடன் இருக்கும் போது உங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. உங்கள் உலகம் அவர்களை சுற்றியே வருவதை போல உணர்வீர்கள். அவர்களுடன் இருப்பது உங்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும். நீங்கள் நீங்களாகவே இருக்கலாம் உங்கள் வாழக்கைத்துணையிடம் நீங்கள் நீங்களாகவே இருக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும். அதாவது உங்களின் குறைகளை அவர்களிடம் மறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணத்திற்கு உங்கள் முகப்பருக்களை மறைக்க தேவையில்லதா முயற்சிகள் எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதனை அவர்களிடம் காட்ட உங்களுக்கு எந்த கூச்சமும் இருக்காது.
சமநிலை நீங்கள் அவர்களுடன் இருக்கும் போது முழுமையாய் உணர வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் அவர்களின் ஒளிமிகுந்த பக்கத்தால் சமன் செய்யப்பட வேண்டும். இதுதான் உங்கள் உறவை சமநிலையில் வைத்திருக்க உதவும். சிறந்தவர் உங்களின் சிறந்த வாழ்க்கைத்துணை என்ன சூழ்நிலையாக இருந்தாலும் உங்களை சிறந்தவராக மாற்றுவார்கள். மோதல்கள் ஏற்படும் தருணங்களில் கூட உங்கள் சண்டை தூய்மையானதாக இருக்கும், உங்கள் உறவு வலிமையடைந்து கொண்டே இருக்கும்.
சுதந்திரம் அவர்களுடன் இருக்கும்போது உங்களுக்கு வித்தியாசமான சுதந்திர உணர்வு இருக்கும். அதாவது நீங்கள் கட்டப்பட்டது போல உணருவீர்கள் ஆனால் நீங்கள் சுதந்திரமாகத்தான் இருப்பீர்கள், நீங்கள் பிணைப்பட்டது போல உணவீர்கள் ஆனால் அப்படி இருக்க மாட்டீர்கள். அன்பும், அலட்சியமும் கலந்து இருக்கும். ஆற்றல்கள் சரியான வாழ்க்கைத்துணையுடன் இருக்கும்போது ஒருவர் மற்றவரின் ஆற்றலை உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிவீர்கள். உங்கள் துணை எப்போது சோகமாக இருப்பார், எப்போது மனஅழுத்தத்துடன் இருப்பார் என்று அறிந்து அந்த சமயத்தில் உங்கள் ஆற்றல்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
காத்திருத்தல் சரியான வாழ்க்கைத்துணையை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் இவர்களை பார்க்கத்தான் இத்தனை காலமாய் காத்திருந்தது போலவும் அவர்களை பார்த்த பிறகுதான் உங்கள் வாழ்க்கை முழுமையடைந்தது போலவும் உணருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதித்த மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கும். உருவமும், பிம்பமும் சரியான ஜோடியாக இருந்தால் வர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த பிணைப்புடன் இருப்பார்கள். ஒருவரின் ஆசைகளை மற்றொருவர் பிரதிபலிப்பார்கள். உருவமும் கண்ணாடியில் தெரியும் அதன் பிம்பம் போலவும் இருப்பார்கள். அவர்களின் விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கும். பிரிந்திருக்க இயலாது எத்தனை சண்டைகள் வந்தாலும் சரி, யார் மீது தவறு இருந்தாலும் சரி நீங்கள் அவர்களை தேடி மீண்டும் செல்வீர்கள். ஒருவரின்றி இன்னொருவர் வாழ்வது என்பது அவர்களால் முடியாத ஒன்று. பக்குவம் பொருத்தமான துணையாக இருக்கும் பட்சத்தில் அதில் ஒருவர் மட்டுமே பக்குவம் உள்ளவராக இருப்பார். ஏனெனில் மற்றொருவர் விளையாட்டுத்தனமாகவும், குறும்புக்காரகவும் இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் இன்னொருவரின் பக்குவத்தால் சமப்படுத்தப்படும்.