முகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்
சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. இந்த பிரச்சனைக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்சனையல்ல.
வயிறு சுத்தமின்மை, மரபியல், மலச்சிக்கல், சுகாதாரமின்மை, மேக் அப் நீக்காதது, ஒத்துக்கொள்ளாத மேக் அப் மேக் அப் பிரஷ், சுத்தமின்மை, தலைமுடியிலிருந்து பரவுதல், பொடுகு, துடைக்கும் துண்டு, எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், சீபம் சுரப்பு அதிகமாக இருப்பது ஹார்மோன் பிரச்சனை, பிசிஓடி உடல்பருமன், கெட்ட கொழுப்பு உடலில் இருப்பது, தலையணை உறை, மலத்தைக் கழிக்காமல் அடக்குதல், உடல் சூடு, தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளால் வருகிறது.
* கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ வராது.
* எலுமிச்சை சாறில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால், ஆக்னியை விரட்டும். ஆன்டிபாக்டீரியல் பொருள் உள்ளதால் ஆக்னியை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். நேரடியாக எக்காரணத்துக்கும் தனியாக எலுமிச்சை சாறை முகத்தில் போட கூடாது. மற்ற பொருட்களோடு சேர்த்துதான் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். தனியாக எலுமிச்சை சாறு மட்டும் போட்டால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும். யோகர்டை நன்றாக வடிகட்டி கெட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கெட்டி யோகர்ட் அல்லது தயிர். அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மாதுளை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்காக போடலாம். 30 நிமிடங்கள் கழித்து வெறும் நீரில் கழுவலாம்.
* பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.
* வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.
* ஜாதிக்காயை சிறிது ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள். அதேபோல சந்தன கட்டையை ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.