சமையல் குறிப்புகள்
குளிர்ச்சி தரும் தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்
தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- தர்பூசணி துண்டுகள் – 2 கப்
- ஆரஞ்சு – 2
- உப்பு – 1 சிட்டிகை
- தேன் – 2 டீஸ்பூன்
- ஆப்பிள் – பாதி
- ஐஸ்கட்டிகள் – சிறிதளவு
அலங்கரிக்க :
- ஆப்பிள் துண்டுகள் – 1 டீஸ்பூன்
- புதினா இலைகள் – 3
செய்முறை :
- ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
- தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.
- மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.
- அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
- சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.