ரொம்ப டென்ஷனா இருக்கீங்களா? இதுல ஏதாவது ஒரு பொருள சாப்பிடுங்க உடனே டென்ஷன் காணாமப்போயிரும்
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை என்றால் அது மனஅழுத்தம்தான். ஆண்டுதோறும் அதீத மனஅழுத்தத்தால் பாதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பல மருத்துவ வழிகளும், பயிற்சிகளும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் மூலமே இந்த மனஅழுத்தத்தை எளிதில் விரட்டாலம். இந்த பதிவில் உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சாக்லேட்
ஆரோக்கிய பலன்கள் மட்டுமின்றி சாக்லேட் உங்களுக்கு மனஅமைதியையும் கொடுக்கக்கூடும். பதட்டத்தை குறைக்கும் மருந்து என்று சாக்லேட்க்கு மற்றொரு பெயர் உள்ளது. சமீபத்திய ஆவியின் படி ஆண்கள், பெண்கள் இருவருமே மனஅழுத்தம் அதிகமாக இருக்கும்போது சாக்லேட்டை சாப்பிடலாம். டார்க் சாக்லேட்டை அளவாக சாப்பிடுவது உங்களுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும்.
க்ரீன் டீ
இதில் காஃபைன் இருந்தாலும் க்ரீன் டீயில் தேனைன் என்னும் அமினோ அமிலம் இருக்கிறது. இது சிலவகையான புற்றுநோய்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும், இது மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கவும் பயன்படும், இதனால் உங்களின் மனஆரோக்கியத்தை அதிகரிக்கும். தினமும் இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பது நல்ல பலனை அளிக்கும்.
பச்சை இலை காய்கறிகள்
மனஅழுத்தம் அதிகரிக்கும் போது நாம் பெரும்பாலும் நொறுக்கு தீனிகளை தேடித்தான் செல்வோம் , ஆனால் அதற்கு பதிலாக பச்சை காய்கறிகள் சாப்பிடுவது அதிக பலனை அளிக்கும். பச்சை இலை காய்கறிகளில் இருக்கும் போலேட், மகிழ்ச்சியையே அழிக்கும் டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது. இந்த வைட்டமின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கும் வைட்டமின் டி குறைபாடு பதட்டம் மற்றும் மனஅழுத்தத்தை உண்டாக்கும். எனவே பால் சாப்பிடுவது கவலை மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
முந்திரி
முந்திரி பருப்பில் அதிகளவு ஜிங்க் இருக்கிறது. ஜிங்க் குறைவாக இருக்கும்போது பதட்டம் மற்றும் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். நமது உடலுக்கு ஜிங்க் கிடைக்க வேறு வழியில்லை, எனவே தினமும் சிறிதளவு முந்திரியை சேர்த்து கொள்வது நல்லது.
அவகேடா
இந்த க்ரீமியான பழம் மனஅழுத்தத்தை குறைக்கும். அவகேடாவில் குளுதயோனின் என்னும் பொருள் நிறைந்திருக்கிறது. இந்த பொருள் உங்கள் குடல் சில விஷத்தன்மை கொண்ட கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது. மேலும் இதில் லூடின், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ அதிகமுள்ளது. இந்த ஒரு பழம் சாப்பிடுவது உங்களின் மனஅழுத்தத்தை உடனடியாக குறைக்கும்.
ப்ளூபெர்ரி
இதில் இருக்கும் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இது அறிவாற்றலை அதிகரிக்கும். அனைத்து வகை பெர்ரிகளிலும் வைட்டமின் சி அதிகமுள்ளது. இது மனஅழுத்தத்தை குறைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது.