உப்பை கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி?
நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
உப்பை கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி?
நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை எளிதாக பராமரித்து அதன் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படும் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
உப்பு கொண்டு ஸ்கரப் செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சொரசொரப்பாக இருக்கும் சருமம் போன்றவை நீங்குவதோடு, சருமம் மென்மையாக வறட்சியடையாமல் பட்டுப்போன்று இருக்கும்.
நமது தலை முடி பிரச்சனைகள் பல உண்டாக, நமது தலையில் உள்ள அதிகமான எண்ணெய் பசை தான் காரணம். அதற்கு நாம் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் உப்பினை 2-3 டேபிள் ஸ்பூன் கலந்து, தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படியே வாரத்திற்கு ஒருமுறை செய்தால் எண்ணெய் பசை நீங்கி கூந்தல் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
சருமம் பொலிவிழந்து இருப்பதை சரி செய்ய, சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு 2 ஸ்பூன் கல் உப்புடன் ½ கப் தேங்காய் எண்ணெய் கலந்து, அதைக் கொண்டு உடலை தேய்த்து கழுவி வர இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவுடன் மின்னும்.
கண்களை சுற்றியுள்ள கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து மசாஜ் செய்தால் கருவளையம் காணாமல் போய் விடும்.
2 கப் கல் உப்பு, 1 1/3 கப் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.
நம் பாதங்களின் அழகை கெடுக்கும் அழுக்கினை நீக்க மற்றும் குதிகால் வெடிப்பினைப் போக்க, உப்புடன் ஆலிவ் எண்ணெய் சம அளவில் கலந்து, பாதங்களில் மெதுவாக தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இப்படியே வாரம் 2-3 தடவை செய்தால் பாதங்கள் அழகாய் தோன்றும்.