சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு விருப்பமான காபி மில்க்ஷேக்
குழந்தைகளுக்கு மில்க்ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் காபி மில்க்ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான காபி மில்க்ஷேக்
தேவையான பொருட்கள்
- இன்ஸ்டன்ட் காபி பொடி – 1 டீஸ்பூன், 25 மில்லி சுடு தண்ணீரில் தனியாக வைக்கவும்),
- வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப் (குழிகரண்டி)
- குளிர்ந்த கெட்டி பால் – 200 மில்லி,
- ஐஸ்கட்டி – 2 கியூப்,
- சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,
- கோகோ பவுடர் – 1/2 டீஸ்பூன்.
மேலே அலங்கரிக்க
- விப்பிங் கிரீம் – 1 கப்,
- சாக்லேட் பவுடர் – மேலே தூவ,
- சாக்லேட் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
மிக்சியில் ஐஸ்கிரீம், பால், காபி டிகாஷன், சர்க்கரை, கோகோ பவுடர், ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் சாக்லேட் சிரப் ஊற்றி பிறகு அதில் மிக்சியில் உள்ள காபி மில்க் ஷேக் ஊற்றி அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து அதன்மேல் சாக்லேட் பவுடர் தூவி பரிமாறவும்.
காபி பிரியர்களுக்கு இந்த கோடைகாலத்தில் காபி மில்க்ஷேக் மிகவும் பிடிக்கும்.