ஆரோக்கியம்உறவுகள்புதியவை

கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்

நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

* சிலருக்கு முதல் ட்ரைமெஸ்டர் வரை வாந்தி இருக்கும். சிலருக்கோ குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள்வரை விடாமல் அது தொடரும். ஒரு சிலருக்கு எப்போதாவது மட்டும் வாந்தி வரும்; மற்றபடி அவர்கள் நார்மலாகவே இருப்பார்கள். இன்னும் சிலருக்கு வாந்தி வருகிற உணர்வு மட்டுமே இருக்கும்… ஆனால், வாந்தியெடுக்க மாட்டார்கள். இதுவும் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு இருக்கும்; சிலரோ வழக்கம்போல சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

* கருவுறுதலின் ஆரம்ப அறிகுறியாக எல்லாப் பெண்களுக்கும் மார்பகங்கள் மென்மையாகும்; வலியெடுக்கவும் செய்யும்.

* கருத்தரித்த ஆரம்பத்தில், சில பெண்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. தண்ணீர்கூட அவர்களுடைய நாக்குக்கு தேவையற்றதாகத்தான் தெரியும். சிலருக்கோ அதிகமான பசி உணர்வு இருக்கும்.

* கருவுற்ற ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். அதற்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் காரணமாக இருக்கலாம், கவனம்.

* இயற்கையாகக் கருத்தரித்த பெண்களுக்கு மலச்சிக்கல் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. கருவுறுதலுக்கான மாத்திரைகள் உட்கொண்டவர்களுக்கு, அவற்றில் இருக்கிற புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* கருக்கலைந்துபோன அனுபவம் உள்ள பெண்கள் மீண்டும் கருவுறும்போது `மனம் அலைபாய்தல்’ என்கிற மூட் ஸ்விங் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக  10% பெண்களே கருவுறுதலின் அறிகுறியாக மூட் ஸ்விங்ஸை எதிர்கொள்கிறார்கள்.

* முதல் ஒரு மாதம் வரைக்கும் மாதவிடாய் வராமல் இருந்து, திடீரென லேசான ரத்தக்கசிவு ஏற்படுதல் 20% பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கிறது. ரத்தக்கசிவு வலியில்லாமல் இருந்துவிட்டால் இது குறித்து பயப்படவேண்டிய அவசியமில்லை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker