ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

எளிதாக கிடைக்கக் கூடிய புதினா கீரையில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!!

புதினா இலையில் வைட்டமின் ‘பி’ சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக்  குணமாக்கும்.
புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள்  விரும்பி வளர்க்கின்றனர்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல்,  சட்னி, பொடி போன்றவை தயாரித்தும், மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை  பயன்படுத்தப்படுகிறது.



புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும்.  மலச்சிக்கலும் நீங்கும்.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.




ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத்  தொல்லையை அகற்றுகின்றது.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள்  காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.




Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker