ஆரோக்கியம்புதியவை

கண்கள் துடிப்பதை சாதாரணமா எடுத்துக்காதீங்க… அது எதோட அறிகுறின்னு தெரியுமா?

நள்ளிரவுக்குப் பின்னும் கூட வெகுநேரம் கண் விழித்து வாட்ஸ்அப், பேஸ்புக் என்று நேரத்தைக் கழிக்கின்றவர்கள் மிக அதிகம். இதில் இளைஞர்களை மட்டும் குறைசொல்ல முடியாது.

செல்போன் பயன்படுத்துகிற எல்லா வயதினருமே இந்த வேலையைத் தான் செய்கிறார்கள். இப்படி செய்வதின் மூலம் நம்முடைய உடலில் நடக்கும் மாற்றங்களை நீங்களே பாருங்கள்

கண் துடித்தல்

பினியல் சுரப்பியானது பார்வை நரம்புகளோடு இணைக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் கண் விழித்திருப்பது, கண் துடிப்பது எல்லாம் வேறு சில உடலியல் விளைவுகளை உண்டாக்குகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று கண் துடிப்பது. கண் துடிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி கண் துடிப்பதை சில அறிகுறிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.




மனித உடல்

நம்முடைய உடல் என்பது மிகவும் அற்புதமான ஓர் படைப்பு. தற்குள் நாம் ஆச்சர்யப்படும் வகையில் ஏராளமான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் குறிப்பிட்ட நேரம் ஆனதும் அந்தந்த வேலைகளைச் செய்கின்ற, உடலில் நேரத்தை தானானவே ஒழுங்குபடுத்தும் உயிரியல் நேர முறைமை (biological clock system).

பினியல் சுரப்பி

இந்த உடலில் நேரத்தை தானானவே ஒழுங்குபடுத்தும் உயிரியல் நேர முறைமையை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம்முடைய ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அந்த சுரப்பியின் பெயர் பினியல் சுரப்பி என்பதாகும். இந்த சுரப்பி நம்முடைய தலையில், கடலை உருண்டை வடிவில் இருக்கும். இந்த பினியல் சுரப்பியானது நம்முடைய பார்வை நரம்புகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.




மெலடோனின்

இந்த சுரப்பியானது தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மிகவும் அரிய பொருள் ஒன்றை நம்முடைய உடலில் சுரக்கச் செய்கிறது. இந்த அரிய பொருளின் பெயர் மெலடோனின் (melatinin). இந்த மெலடோனின் பலன் மிகவும் அரியது. இந்த மெலடோனில் இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கின்ற சக்தி இதற்கு இருக்கிறது. இந்த மெலடோனின் இருட்டில் தான் சுரக்கும். குறிப்பாக, விளக்கை நாம் அணைத்துவிட்டு தூங்குகிற நேரத்தில் தான் சுரக்கும். நம்முடைய பார்வை நரம்புகளோடு பினியல் சுரப்பி இணைக்கப்பட்டுள்ளதால், இருள் வந்துவிட்டதை நம் கண்களின் மூலம் பினியல் உணர்ந்து கொள்ளும்.

நேரம்

தினமும் இரவில் 10 மணிக்கு மேல் இருளில் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி சுரக்கும் இந்த மெலடோனின் நம்முடைய ரத்த நாளங்களில் பாய்ந்து ஓடும். நம்முடைய கண்களில் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருந்தால் பினியல் சுரப்பி மெலடோனியை சுரக்காது. அப்படி இரவு பத்து மணிக்கு சுரக்க ஆரம்பிக்கும் பினியல் சுரப்பி மெலடோனின் சுரக்கும் வேலையை அதிகாலை 5 மணிக்கு நிறுத்திவிடும். இது உங்களுக்கு ஆச்சர்யுமாகக் கூட இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.




நீண்ட நேரம் கண்விழித்தால்

இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் புற்றுநோயைக் குணப்படுத்துகின்ற மெலடோனின் என்னும் இயற்கை மருந்தை நாம் இழந்து விடுவோம்.

அதிகாலை எழுவது

எனவே முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் போது புற்றுநோயைத் தடுக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேபோல் அதிகாலையில் எழுந்தால், அந்த அதிகாலையில் காற்றுவெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும். அது நம்முடைய உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்தி நம்முடைய ஆயுட்காலத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மன அழுத்தம்

நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால் தான் கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருப்பின் அதை குறைக்கின்ற செயல்களில் ஈடுபடுங்கள்.




போதிய தூக்கமின்மை

நாள் முழுவதும் கணினியில் வேலை பார்ப்பது, குறிப்பாக, போதிய தூக்கமின்மை, உடல் அதிக சோர்வாக இருத்தல் ஆகியவற்றாலும் கூட கண் துடிக்கும். கண்களுக்குப் போதிய ஓய்வை கொடுக்காமல் எப்போதும் கணினியின் மூலமோ மொபைலின் மூலமோ அதிக நேரத்தை செலவிட்டால் கண்கள் மிக வேகமாகவே களப்படைந்து விடுகிறது. கணினித் திரையின் ஒளியினா்ல கண்கள் வேகமாகக் களைப்படைந்து விடாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுப்பது நல்லது. அதற்கு மிகச்சிறந்த தீர்வாக தூக்கத்தை சொல்லலாம். கண்களுக்கு முழுமையானஓய்வு கொடுக்கிற விஷயம் தூக்கத்தில் தான் இருக்கிறது.

ஆல்கஹால்

அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வதாலும் அடிக்கடி கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே நீங்கள் மது அருந்துபவராக இருந்தால், டீ, காபி, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வதோ அல்லது முற்றிலும் நிறுத்துவதோ நல்லது.




தண்ணீர் குடிப்பது

தினமும் உடலுக்குப் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கண்கள் விரைவாக வறட்சியடையும். அப்படி கண்கள் வறட்சியடைவதை நமக்குச் சுட்டிக் காட்டும் ஒரு அறிகுறி தான் கண் துடிப்பது.

கண் வீக்கம்

கண்களில் ஏதேனும் அழற்சி, அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை சிலருக்கு அடிக்கடி ஏற்படும். அப்படி பிரச்சினை இருப்பவர்களுக்கு கண்கள் அடிக்கடி துடிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker