ஆரோக்கியம்புதியவை

சிறுநீர் வெளியேறும் துவாரத்துக்கிட்ட அரிப்பு எடுக்குதா? அப்போ இத நீங்கதான் படிக்கணும்…

பிறந்த குழந்தைகளுக்குக் கூட குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம். தவழும் வயதில் மாசுக்கள் உள்ளே செல்வதால் பெண் குழந்தைகளுக்கும் இது அதிக பாதிப்பு ஏற்படுவதை அறியலாம்.

நுண்கிருமிகளால் சிறுவர்களுக்கு நுரையீரல் பகுதிக்குக் கீழ் பாக்டீரியா குவிகின்றன. அதேபோல் அஜீரணக் கோளாறு மற்றும் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனையுள்ள ஆண்களுக்கும் UTI பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீர் துவாரம்

சிறுநீர் பாதையில் தொற்று (UTI) என்பது பெரும்பாலும் பாக்டீரியாக்களால் தான் ஏற்படுகின்றதன. அதோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் இந்த தொற்றை மேலும் தீவிரப்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. இந்த வகை தொற்றுக்கள், ஆண்களை விட குறுகிய சிறுநீர் பாதை அமைப்பை கொண்டவர்களான பெண்களுக்குத் தான் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுநீர் பாதையோடு, சிறுநீர்ப்பை, சிறுநீர் வெளியேறும் தூவரம், சிறுநீர் குழாய் ஆகிய இடங்களில் இந்த தொற்று ஏற்படக்கூடும்.




அறிகுறிகள்

UTI தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாக சில உள்ளன. அவை, சிறுநீர் பாதையில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சூழ்நிலை, சிறுநீர் வெளியேற தாமதமாதல் ஆகியவை தான். மேலும் இந்த தொற்று தீவிரமாகவும் போது உடல் வெப்பநிலை அதிகரித்து, நெறிக்கட்டிக் கொள்ளும். காய்ச்சலும், சிறுநீரில் இரத்தமும் கூட கலந்து வெளியாகலாம். இவையெல்லாம் இயல்பாக எல்லோருக்கும் வரக்கூடிய அறிகுறிகள் தானே என்று கவனக் குறைவாகவும் இருந்து விடக் கூடாது.

பாதுகாப்பு முறைகள்

ஆனால் நிரந்தரமாக, நாட்பட்ட அறிகுறிகளாக தெரியும் போது உடனே தகுந்த மருத்துவரை அணுகி சிகிக்சை எடுத்துக் கொள்வதோடு மருத்துவர் குறிப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்துகளை நேரம், நாள் தவறாமல் எடுத்துக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு இந்த சிறுநீரக நோய் தொற்றை தடுத்துக் கொள்ள முடியும்.

பாதுகாப்பற்ற உடலுறவு, குடலில் பாக்டீரியா போன்றவற்றை சிறுநீர் தொற்று உருவாக காரணமாக சொன்னாலும், பெரும்பாலும் நான் உட்கொள்ளும் உணவே இந்த நோய் தொற்றை தீவிரப்படுத்துகிறது.




உண்ணும் உணவில் கவனமாக இருந்தாலே பெரும்பாலும் இந்த சிறுநீர் தொற்று நோயை தடுத்து விட முடியும். ஆகையால் கீழ் கண்ட உணவுகளை சிறுநீரக தொற்றுக்கு தடை செய்யப்பட்ட உணவாக கருதி அதை முடிந்த வரை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது. இதோ நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்

வெள்ளை சர்க்கரை

வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், குறிப்பாக பேக்கரி உணவுப் பொருட்கள் பாக்டீரியா பெருகி வளர உரமாக அல்லது உணவாகவே கருதப்படுகிறது. இதனால் சிறுநீரக தொற்று நோயாளிகள் எடுக்கும் சிகிச்சையின் வீரியத்தை குறைத்து அவர்களுக்கு மேலும் தொற்றை தீவிரப்படுத்தி சிக்கலில் மாட்டி விடக் கூடும். ஆகையால் அதிகமான சர்க்கரை அளவுள்ள குளிர் பானங்கள், குக்கீஸ், கேக், இனிப்பு வகைகளை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது.

காபினைன்

இது சிறுநீரகத் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் மிகுதியான இரத்த ஓட்டத்தை உருவாக்கி தொற்றை தீவிரப்படுத்தக்கூடும். காபியை தவிர்ப்பதோடு, டீ, சோடா, சாக்லேட் அல்லது சுகாதாரமற்ற பழச்சாறுகளை கவனத்தோடு தவிர்ப்பது தான் நல்லது. காபி, டீ ஆகியவற்றை சிலர் தவிர்க்க முடியாத சூழலில் தங்கள் நோய் தன்மைக்கேற்ப குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. அது மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்து அளவும் நிர்ணயித்து கொள்வது மிகவும் முக்கியம். மாற்றாக இயற்கையான நீர் மற்றும் பழச்சாறுகளை அருந்தலாம்.




சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு பழச்சாறு உடலுக்கு நல்லது தான். ஆனால் அதில் அசிட்டிக் அமிலம் அதிகமாக இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. சிட்ரஸ் பழ வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி, தக்காளி போன்றவைகள் சீறுநீர்ப் பாதையை எரிச்சலூட்டுவதோடு, சிறுநீர் கட்டிகளை உருவாக்கும். எனவே மருத்துவ ஆலோசனைப்படி இத்தகைய பழங்களை எடுத்துக் கொள்ளும் அளவை தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை மேற்கண்ட சிட்ரிக் பழ வகைகளை தவிர்ப்பது சிறந்தது.

ஃபாஸ்ட் புட்

நம் பராம்பரிய உணவு முறைகளே சற்று காரசாரமான வகைகள் தான். ஆனால் இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் பதப்படுத்தபட்ட இறைச்சி, மேலும் உணவு சுவை கூட்டிகள், ஃபுட் கலர் எனப்படும் கலர்பொடிகள் நிச்சயம் உடலுக்கு கேடு தான். அது சிறுநீரக தொற்று வியாதிகளுக்கு மட்டும் இல்லை. எல்லோருமே தவிர்ப்பது நல்லது.

மாவுப் பொருள்கள்

பாஸ்தா, பீஸா, ரொட்டிகள், நூடுல்ஸ் என்று வெள்ளை மாவுகளால் தயாரிக்கப்படும் அனைத்தும் உங்கள் உடல்நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும். இது சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் போது மட்டும் இல்லை. பெரும்பாலும் இவைகளை உடம்பில் சர்க்கரையாக மாற்றுவதாலும் இவை பெரும் கேடாக அமைகிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.




இறைச்சி

சிவப்பு இறைச்சி கிட்டதட்ட தடை செய்யப்பட்ட உணவு வகைகள் போலத்தான். இவை மறைமுகமாக உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கிறது. உடலில் அமிலத்தை அதிகரீத்து பாக்டீரியாக்களை பெருக்குகிறது. இதற்கு பதிலாக நாட்டுக்கோழி, மீன் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

அரிசி உணவு, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள் ஆல்கஹால், சிப்ஸ் மற்றும் ஸ்டார்ச் உணவுகள், பால் பொருள்கள், தேன், செயற்கை இனிப்பூட்டிகள், அதிக கொழுப்பு வகை உணவுகள் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker