ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம்

வயிற்றில் உள்ள அமிலம் மேலேறி உணவுக் குழாய்க்கு வரும் பொழுது உணவுக்குழாயின் உள் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. கார மசாலா உணவுகளே நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

* நிணிஸிஞி எனப்படும் ஆசிட் மேல் எதிர்த்து எழுதல் காரணமாக தீரா நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

* ஆஸ்ப்ரின் மற்றும் சில வலிநிவாரண மாத்திரைகளால் நெஞ்செரிச்சல் உண்டாகலாம். அதனால்தான் இந்த மாத்திரைகளை உணவுக்குப் பின்பே மருத்துவர் பரிந்துரைப்பார்.

* ஆல்கஹால் போன்ற பிரிவுகள் வயிற்றில் ஆசிட் சுரப்பினை அதிகம் கூட்டி விடுவதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.




* புகை பிடித்தலும் மேற்கூறிய காரணத்தினைப் போன்றதே. இவைகள் உணவுக்குழாயினையே வலுவிலக்கச் செய்துவிடும்.

* கர்ப்ப காலத்தில் கீழ் வயிற்றில் ஏற்படும் அழுத்தத்தால் அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

* புற்றுநோய்

* மாரடைப்பு

* அதிக எடை

* மன உளைச்சல்

* அதிக (அ) குறைந்த வயிற்று ஆசிட் இவை அனைத்துமே நெஞ்செரிச்சலுக்கு காரணமாகின்றன. மிகச் சாதாரண காரணம் முதல், மிக அபாயகரமான காரணம் வரை நெஞ்செரிச்சல் பாதிப்பு இருக்கும் என்பதனை அறிந்துகொண்டால் நாம் கவனத்துடன் இருக்க முடியும். பொதுவாக நெஞ்செரிச்சலைத் தவிர்க்க நாம் கட்டாயம் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* அதிக உணவு உண்ணாதீர்கள். சிலர் சாப்பிடும் பொழுது அதிகமாக சாப்பிடுவார்கள். பிறகும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு உணவுக்குழாய் சதைகளே பலவீனமாகிவிடும். இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் எப்பொழுதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

* எடையினை சரியான அளவில் வைத்திருங்கள்.




* சில உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

* மது, பால், சாக்லேட், காபி, பொறித்த, வறுத்த உணவுகள், சிலருக்கு பச்சை வெங்காயம், பாஸ்ட் புட்ஸ் போன்றவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக் கூடியவை.

* காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிருங்கள்

* வயிற்றின் மேல் படுப்பதனைத் தவிர்த்து பக்கவாட்டில் தூங்குங்கள். தலையனை வைத்து சற்று தலையினை உயர்த்தி படுங்கள்.

* இடது பக்கவாட்டில் படுத்து உறங்குவது நல்லது.

* வயிறு புடைக்க உணவு உட்கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். தூங்குவதற்கு 3 மணிநேரம் முன்பே உணவு உட்கொள்வது சரியானது.




* அதிக உணவு உண்ணாதீர்கள் (எப்பொழுதும்)

* அதிக கார்போ ஹைட்ரேட்டால் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்

* சோற்றுக் கற்றாழையினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடியுங்கள். இது வலி நீக்கும். வீக்கத்தினைக் குறைக்கும். நெஞ்செரிச்சலை நீக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியினைக் கூட்டும்.

* ஒரு லிட்டர் தண்ணீரில் 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து அதனை குடிநீராகப் பயன்படுத்துங்கள்.

* இஞ்சி, சிறிது பட்டைதூள் சேர்த்து டீ குடியுங்கள்.

* தினமும் 15 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இது உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு மூளையினை சுறுசுறுப்பாய் இயங்கச் செய்கின்றது.

* முதுகு வலி நீக்குகின்றது.




* இடுப்பு பருமனை  குறைக்கின்றது.

* கால்களில் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதினைத் தவிர்க்கின்றது.

* இருதய பாதிப்பினை குறைக்கின்றது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker