ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

டென்னிஸ் எல்போ நோய்க்கான காரணமும் – தீர்வும்

டென்னிஸ் எல்போ நோய்க்கான காரணமும் - தீர்வும்

தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் இவ்வியாதி வருகின்றது.

மணிக்கட்டைச்சுற்றியும் வெளிப்புறமாகவும் வலி ஆரம்பிக்கும், கைகுலுக்கும் போதும் ஏதாவது ஒன்றை பிழியும் போதும், பொருட்களை தூக்கும்போதும், மூடியைத் திறக்கும் போதும் வலி அதிகமாகும்.



ஆயுர்வேத சிகிச்சை

மூன்று தோஷங்களும் நிலைமாறுவதால் வரலாம் மூட்டுக்களை தவறான முறையில் உபயோகிப்பதாலும் வரலாம், அடிபடுவதாலும் வரலாம்.

சிகிச்சை

மூன்று தோஷங்களையும் சமநிலைபடுத்துவதே இதற்கான சிகிச்சை முறையாகும். மூட்டைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நோய் சரியாகும் வரை குறிப்பிட்ட மூட்டு அசையாமல் கட்டி வைப்பது நல்லது. தன்வந்த்ரம் தைலம் உபயோகிக்கலாம்.

எள், வெந்தயம் ஆகியவற்றை பாலில் வேக வைத்து பத்துபோடலாம். தசமூலசூரணம், பால் இவற்றை கலந்து பத்து போடலாம். முறிவெண்ணை உபயோகித்து கட்டுப் போடலாம். பஞ்சாம்ல தைலம், முறிவெண்ணை, பிண்ட தைலம், ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

உள்ளே சாப்பிட

மஹாமஞ்சிஷ்டாதி கஷாயம், தன்வந்த்ரம் கஷாயம், சந்திரபிரபா குளிகா ஆகியவற்றை உள்ளே சாப்பிடலாம்.

குதிகால் வலி: (வாத கண்டகம் / அஸ்திகிரந்தி)
குதிகால் எலும்பில் முள்போன்று வளர்வதால் இந்நோய் வருகின்றது.
கண்டகம் என்றால் முள், எலும்பின் அதிக வளர்ச்சியே இந்நோய்.



உள்ளே சாப்பிட மருந்து

குக்குலு திக்தககஷாயம், பஞ்சதிக்தத ஷீரம், எள், கஷாயம் ஆகியவற்றை உள்ளே எடுக்கலாம்.

வெளியே போட

பலா அஸ்வந்தாதி தைலம், கொட்ட ஏசுக்காதி தைலம் ஆகியவற்றால் பத்து போடலாம்.புளி இலை/ஆமணக்கு இலையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, மூட்டை கட்டி, சூடு செய்து கொடுக்கலாம்.

வீட்டு வைத்தியம்

செங்கல்லைச் சூடாக்கி அதன்மேல் பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மேல் குதிகாலை வைக்க வேண்டும் முள்போல இருப்பது மழுங்கி விடும்.

ஆஸ்டியோ மைலைட்டிஸ்

எலும்பு மஜ்ஜையில் வரும் நோய்தொற்று

காரணம்

எலும்பு, எலும்பு மஜ்ஜையில் டி.பி. இருப்பதால் வருவது. குழந்தைகள், பருவ வயதினர்க்கு அதிகம் வரும் நீரிழிவு நோயால் காலில் வரும் புண்கள் மூலம் பரவும் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தால் வரும்.

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி இருக்கும், காய்ச்சல் வரும், பாதிக்கப்பட்ட இடம் நெகிழ்ந்து மென்மையாக இருக்கும்.



சிகிச்சை

இந்நோய் பித்த அனுபந்த வாதத்தால் வருகிறது. வீக்கம் பித்தத்தால் வருவதே. ஆகவே பித்தம் குறைய, வாத அனுலோபனம் செய்ய வேண்டும் வாதத்தை அதன் போக்கில் திருப்ப வேண்டும்.

உள்ளே சாப்பிட

புனர்னவாதி கஷாயம், பலாகுடூச்சியாதி கஷாயம், தீராயந்த்தாதி கஷாயம், சுகுமாரகஷாயம், சுகுமாரக்ருதம் ஆகியன உள்ளே சாப்பிடலாம்.



வெளியே தேய்க்க

மதுயஷ்டியாதி தைலம், ஆரணாளாதி தைலம் ஆகியன வெளியே தேய்க்க கூடியவை.அரிசி கழுவிய தண்ணீரை, புளிக்க வைத்து தாரா செய்யலாம். கரும்புச்சாறு கொண்டும் தாரா செய்யலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker