அழகு..அழகு..புதியவை

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப்

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப்

கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.

சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.


பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.


தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.

தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker