தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பிறக்கும் குழந்தைகள் குறைபாடோடு பிறக்கக் காரணம்

பிறப்புக்குறைபாடுகளானவை குழந்தை பிறக்கும்போது காணப்படும் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டு குறைபாடுகள் ஆகும்.

இவை பெரும்பாலும் உடலியல் அல்லது உளவியல் ரீதியில் குழந்தையைப்பாதிப்பதுடன் சிலவேளைகளில் இறப்பையும் ஏற்படுத்தலாம்.

பல்லாயிரக்கணக்கான பிறப்புக்குறைபாடுகள் கண்டறியப்பட்ட போதிலும் இவற்றிலே சில குறைபாடுகளே நீண்டகாலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் சிசுக்களின் இறப்பிலே பிரதான பங்கினை வகிக்கின்றது.

பிறவிக்குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள்

இவை ஏற்பட பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் பிரதான காரணங்களாக அமைவன

    • ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பரம்பரை அலகு மாற்றங்களால் ஏற்படுத்தப்படும் சந்ததிகளூடாப்படும் குறைபாடு
    • நிறைமூர்த்தங்களின் மேலதிக சேர்வு அல்லது இழப்பு
    • சூழலியற் காரணங்களான றுபெல்லா மற்றும் மருந்துப்பொருட்கள் அல்ககோல் ஆகியவற்றை கர்ப்பகாலத்தில் பயன்படுத்தல்

 

 

 

 

 

பிறவிக்குறைபாட்டின் வகைகள்

பிரதானமாக இருவகைப்படும்

      • கட்டமைப்புக்குறைபாடு
      • தொழிற்பாட்டுக்குறைபாடு

கட்டமைப்புக்குறைபாடுகள் என்பவை

      • உள்வளைந்த பாதம்
      • அசாதாரணமான அவயங்கள்
      • வால்வுகளற்ற தன்மை
      • இதயக்கோளாறுகள்
      • உதடு மற்றும் அண்ணப்பிளவு போன்ற உடல் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்

இத்துடன் நரம்புக்குழாய்க் குறைபாடுகளான இரு கூரடைந்த முள்ளந்தண்டென்பு மூளை முண்ணாண் விருத்திக்குறைவு ஆகியனவும் இவற்றுள் அடங்குகின்றன.

தொழிற்பாட்டுக் குறைபாடுகளாவன உடல் பகுதிகள் மற்றும் ஒருமித்த உடல்தொகுதி செயற்படுகின்ற விதத்தில் கோளாறுகள் ஏற்பட்டு அவை விருத்திக் குறைபாடுகளுக்கு இட்டுச்செல்லும் நிலைமைகளாகும்.

அவையாவன

      • நரம்பு மற்றும் மூளைக் குறைபாடுகள்
      • மனவளர்ச்சி குன்றுதல்
      • புலன் நரம்புக் குறைபாடுகள்
      • அனுசேபக் குறைபாடுகள்
      • கல அழிவு நோய்கள் என்பனவாகும்

 

 

 

 

 

சிகிச்சை முறைகள்

நோய்கள் ஏற்படும் விதத்தைப்பொறுத்தும் அவற்றின் விளைவுகளைப்பொறுத்தும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. உங்களுடைய குடும்ப வைத்தியருடன் மனந்திறந்து உரையாடி இக்குறைபாடுகளுள்ள குழந்தைகளை பரிகரிப்பது பற்றிய முழுத்தகவல்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker