புதியவைமருத்துவம்
இரத்த சோகை தவிர்க்க – சேர்க்கவேண்டிவை
இரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே இரத்த சோகையின் குணங்கள். இவை எல்லாமே இரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.
சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.
எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.
தவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.