புதியவைமருத்துவம்

வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்

பெருங்காயத்தை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.

உணவுக்கு வாசனை, சுவை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுவது பெருங்காயம். இதை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வீக்கத்தை கரைத்து வலியை குறைக்க கூடியதாக விளங்குகிறது. நுண்கிருமிகளை போக்கும் தன்மை உடையது. தலைவலி, உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க கூடிய அற்புத மருந்தாக பெருங்காயம் விளங்குகிறது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். இருமலை போக்க கூடியது.

பெருங்காயத்தை பயன்படுத்தி மாந்தத்தை சரிசெய்து பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பெருங்காயம், மிளகு, திப்பிலி, சுக்குப்பொடி, சீரகம், உப்பு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் 10 மிளகு, 5 திப்பிலி, சிறிது சீரகம் எடுத்து தட்டி போடவும். இதனுடன் சிறிது பெருங்காய தூள், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி உணவுக்கு பின் குடித்துவர வாயு தொல்லை நீங்கும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.</p>

பெருங்காயத்தை கொண்டு ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளரில் வெந்நீர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயம், உப்பு, அரை எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும். இவற்றை கலந்து உணவுக்கு பின் குடித்துவர ஒற்றை தலைவலி சரியாகும். கடுமையான தலைவலி, வாந்தி, நடுக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு காரணமான ஒற்றை தலைவலி இல்லாமல் போகும்.

குழந்தைபெற்ற தாய்மார்களின் வயிற்றில் அழுக்குள் தங்காமல் இருப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். 2 பல் பூண்டு நசுக்கி எடுக்கவும். கால் ஸ்பூன் பெருங்காயம், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர கருப்பையில் அழுக்குகள் சேராமல் வெளியேறும். அழுக்கள் வெளியேறாமல் இருந்தால் காய்ச்சல் ஏற்படும். பாதுகாப்பான மருந்தாக இது விளங்குகிறது.

பல் வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். லவங்கம் ஒரு ஸ்பூன் எடுத்து பொடித்து நீரில் இட்டு காய்ச்சி அதிலிருந்து வரும் புகையை பற்களில் படும்படி காட்டுவதால் பல் வலி விலகிப்போகும். இந்த நீரில் உப்பிட்டு வாய்கொப்பளித்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்தகசிவு சரியாகும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker