30 வயதிற்கு மேல் உங்கள் சருமம் இளமையாக இருக்க
பெண்கள் பெரும்பாலும் 30 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
பெண்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.
சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
தேவையான பொருட்கள் :
முல்தானி மெட்டி – 1 கப்
1 ப்ளாக் டீ பேக் – 1
ஆலிவ் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
காபித் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
ஹாஜல் நட் சாறு (Hazelnut juice) – 10 துளிகள்.
நீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.
மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.
20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
இவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.
முகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.